கர்நாடகா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஷ்மண் சவடி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் கட்சியில் இணைந்தார்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல், வரும் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முதலில் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இரு நாள்களுக்கு முன்னர் பாஜக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் நடப்பு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் உட்பட பலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்தவர்கள் பாஜகவிற்கு எதிராக போர் கொடி தூக்கினார். இதன் விளைவாக அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஷ்மண் சவடி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தேர்தல் நடைபெற சில நாள்களே உள்ள நிலையில், இந்த மாற்றம் காங்கிரஸ் கட்சிக்கு வலுசேர்ப்பதாக அக்கட்சி தெரிவித்தது. லக்ஷ்மண் சவடி விரும்பும் அத்னி தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்தார்.  இந்த தொகுதியில் லக்ஷ்மண் சவடி 2004இல் இருந்து 2018 வரை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

இதையும் படிங்க: 19 ஆண்டுகள் வசித்த அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி…!

அதேவேளை, லக்ஷ்மண் சவடி விலகியதால் பாஜகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை என்று அம்மாநில தலைவர் அருண் சிங் கூறினார். விரைவில் காங்கிரஸின் உண்மை முகத்தை லக்ஷ்மண் சவடி புரிந்துக் கொள்வார் என்று அருண் சிங் தெரிவித்தார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10 தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *