வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாக்பூர்: ராகுல் தனது ‘பாரத் ஜோடோ’ யாத்திரை குஜராத்திலிருந்து துவங்கியிருக்க வேண்டும் என தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கூறியுள்ளார்.

2024 லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி, காங். எம்.பி., ராகுல் பாரத் ஜோடோ என்ற பாதயாத்திரையை தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து கடந்த 7-ம் தேதி துவங்கியுள்ளார்.
இந்நிலையில் பிரபல தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வந்தார்.

latest tamil news

அங்கு தனது ஆதரவாளரான ஆஷிஷ் தேஷ்முக், ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் போது பிரசாந்த் கிஷோர் பேசியது,இனி எந்த கட்சிக்காவும் பணியாற்ற விரும்பவில்லை. மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். ராகுல் தனது ”பாரத் ஜோடோ” யாத்திரையை தமிழகத்திலிருந்து துவங்கியதற்கு பதிலாக, குஜராத் மாநிலத்திருந்து பாதயாத்திரையை துவக்கி, பா.ஜ., ஆளும் மாநிலங்கள் வழியாக யாத்திரையை நடத்தியிருந்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.