தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜிக்கு பணி நிறைவு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில்… 75 நீதிபதிகளுக்கு தலைமை தாங்கிய ஒரு நீதிபதியை ..
இரண்டே இரண்டு நீதிபதிகள் கொண்ட மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்..
இதிலே கவனிக்க வேண்டியது தமிழ் நாட்டில் பத்து மாதங்களில் இங்கே அவர் வழங்கிய பல முக்கிய தீர்ப்புகள் மீடியாக்களின் சர்ச்சை மட்டுமல்ல அதிகார மைய்யதின் குவியல்களுக்கு வயிற்றில் புளியை கரைத்தது ..
ஒன்றி கவனித்தால் இவை எல்லாமே ஒன்றிய அரசின் அதிகார குவியலை தட்டி கேக்கும் வழக்குகளில் ..
ஏப்ரல் 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட இந்திய #தேர்தல்ஆணையம் மீது ஏன் கொலைக்குற்றம் சுமத்தக்கூடாது என்று காரசாரமாக பதிவு செய்தவர் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி
அதிமுக ஆட்சியில் #ஸ்டெர்லைட் ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ” மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று விட்டு நஷ்ட ஈடாக அவர்களுக்கு பணத்தை வீசி எறிந்து விட்டால் கடமை முடிந்து விட்டதா..என்றும் சீறியவர் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி..
#நீட் தேர்வு குறித்த சாதக பாதக அம்சங்கள் குறித்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசு அமைத்த மாண்புமிகு ஓய்வு நீதியரசர் ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை ரத்து செய்ய வேண்டி #பாஜக வின் உயர் பொறுப்பில் இருந்தவர் செய்த பொதுநல வழக்கில் ” மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அத்தகைய கமிஷன் அமைப்பதில் என்ன தவறு என்று கேட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி..
புதுச்சேரியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் குளறுபடி இருப்பதாக கூறி #புதுச்சேரி யில் நடக்கவிருந்த #உள்ளாட்சி தேர்தலை கடைசி நேரத்தில் நிறுத்தி விட்டார் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி. .
இதெல்லாம் போதாது என்று சிகரம் வைத்தது போல உயர்நீதிமன்றம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மழை நீர் வடிகால் ஒப்பந்தங்கள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி (ஒன்றிய அரசின் மேற்பார்வையில் நடந்த #smartcity )ஊழல்களை நாங்களே விசாரிக்க வேண்டி வரும் என்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி சொன்ன அடுத்த நாள் தான் இந்த மாற்றல்
+ There are no comments
Add yours