உலக வரலாற்றில் இன்று 11.11.2021 வியாழக்கிழமை

Estimated read time 1 min read

🚹உலக வரலாற்றில் இன்று 11.11.2021 வியாழக்கிழமை🚺

┈┉┅━•• ••━┅┉┈
தேசிய கல்வி தினம்

┈┈┈┅◉☆••☆◆◉┅┈┈┈

1100 – இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் மன்னர் மூன்றாம் மால்க்கத்தின் மகள் மெட்டில்டாவை திருமணம் செய்தார்.

1028 – பைசாந்தியப் பேரரசர் எட்டாம் கான்ஸ்டன்டைன் 66 கால ஆட்சியின் பின்னர் இறந்தார்.

1500 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நாபொலி பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.

1572 – டைக்கோ பிராகி எசுஎன் 1572 என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பை அவதானித்தார்.

1673 – உக்ரைனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-இலித்துவேனியப் படைகள் உதுமானிய இராணுவத்தைத் தோற்கடித்தன.

1675 – குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவாகப் பொறுப்பேற்றார்.

1675 – கோட்பிரீட் லைப்னிட்ஸ் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக தொகையீட்டு நுண்கணிதத்தைப் பயன்படுத்தினார்.

1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: செனெக்கா பழங்குடிகள் மத்திய நியூயார்க்கில் குடியேறிகள், படையினர் உட்பட 40 பேரைக் கொன்றனர்.

1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: கிறிசுலர் பண்ணையில் இடம்பெற்ற போரில், பிரித்தானிய, கனடியப் படைகள் அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.

1831 – அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர் வர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டார்.

1865 – டீஸ்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைத்தது.

1869 – பழங்குடியினரின் சம்பளம், வேலை, எங்கு அவர்களும் அவர்களது பிள்ளைகளும் எங்கு வசிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் விக்டோரிய பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் ஆத்திரேலியாவில் கொண்டு வரப்பட்டது. இது பின்னர் திருடப்பட்ட தலைமுறைகளுக்கு வழிவகுத்தது.

1887 – ஹேமார்க்கெட் படுகொலை: ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டனர்.

1889 – வாசிங்டன் அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

1909 – அவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.

1918 – பிரான்சில் “கொம்பியேன் காடு” என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் செருமனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.

1918 – யோசப் பித்சூத்ஸ்கி வார்சாவுக்குத் திரும்பி போலந்தின் உயர் இராணுவப் பதவியைப் பெற்றான். போலந்து விடுதலை பெற்றது.

1919 – இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

1923 – தோல்வியில் முடிந்த புரட்சியை அடுத்து இட்லர் மியூனிக் நகரில் கைது செய்யப்பட்டார்.

1930 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.

1933 – யாழ் பொது நூல் நிலையம் திறக்கப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச கடற்படை முதல் தடவையாக போர்க் கப்பல்களுக்கிடையேயான தாக்குதலை மேற்கொண்டது.

1960 – தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

1965 – ரொடீசியாவில் (இன்றைய சிம்பாப்வே), இயன் சிமித் தலைமையிலான வெள்ளையின சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது.

1966 – நாசா ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.

1967 – வியட்நாம் போர்: கம்போடியாவில் மூன்று அமெரிக்கப் போர்க் கைதிகள் வியட் கொங் படைகளால் விடுவிக்கப்பட்டனர்.

1968 – மாலைதீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.

1975 – ஆத்திரேலியாவில் ஆளுநர் சர் ஜோன் கெர் கஃப் விட்லமின் அரசைக் கலைத்து மால்கம் பிரேசரை இடைக்காலப் பிரதமராக அறிவித்தார்.

1975 – அங்கோலா போர்த்துகலிடம் இருந்து விடுதலை பெற்றது.

1981 – அன்டிகுவா பர்புடா ஐக்கிய நாடுகள் அவையின் இணைந்தது.

1992 – இங்கிலாந்து திருச்சபை பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.

2000 – ஆஸ்திரியாவில் இழுவை ஊர்தி ஒன்று தீப்பிடித்ததில் 155 பேர் உயிரிழந்தனர்.

2004 – யாசிர் அரஃபாத் இனந்தெரியாத காரணங்களால் உயிரிழந்ததை பலத்தீன விடுதலை இயக்கம் உறுதி செய்தது. மகுமுது அப்பாசு தலைவரானார்.

2012 – மியான்மரில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில், 26 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1821 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, உருசிய எழுத்தாளர் (இ. 1881)

1847 – பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ், பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1900)

1875 – வெசுட்டோ மெல்வின் சுலிப்பர், அமெரிக்க வானியலாளர் (இ. 1969)

1885 – அனுசுயா சாராபாய், இந்தியாவின் பெண்கள் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடி (இ. 1972)

1888 – அபுல் கலாம் ஆசாத், இந்திய அரசியல்வாதி (இ. 1958)

1888 – ஆச்சார்ய கிருபளானி, இந்திய அரசியல்வாதி (இ. 1982)

1899 – கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழறிஞர் (இ. 1994)

1908 – பி. எஸ். பாலிகா, இந்திய எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1958)

1909 – எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார், இறைக்கதை சொற்பொழிவாளர் (இ. 1991)

1911 – டி. பி. ராஜலட்சுமி, தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகை, முதல் பெண் இயக்குநர் (இ. 1964)

1917 – மரகதம் சந்திரசேகர், இந்திய அரசியல்வாதி (இ. 2001)

1921 – எஸ். தட்சிணாமூர்த்தி, தென்னிந்திய இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 2012)

1922 – கர்ட் வானெகெட், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)

1937 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர்

1937 – இசுரீபன் லூவிசு, கனடிய அரசியல்வாதி

1943 – அனில் காகோட்கர், இந்திய அணு அறிவியலாளர்

1945 – டானியல் ஒர்ட்டேகா, நிக்கராகுவா அரசுத்தலைவர்

1955 – ஜிக்மே சிங்கே வாங்சுக், பூட்டான் மன்னர்

1957 – மிசேல் டி கிரெட்சர், இலங்கை-ஆத்திரேலியப் புதின எழுத்தாளர்

1960 – பீ. எம். புன்னியாமீன், இலங்கை எழுத்தாளர், நூலாசிரியர், வெளியீட்டாளர் (இ. 2016)

1963 – பொன்னம்பலம், தமிழக நடிகர்

1974 – லியோனார்டோ டிகாப்ரியோ, அமெரிக்க நடிகர்

1989 – அசோக் செல்வன், தமிழ்த் திரைப்பட நடிகர்

இறப்புகள்

683 – முதலாம் யசீத், 2-ஆம் கலீபா (பி. 647)

1831 – நாட் டர்னர், அமெரிக்கக் கிளர்ச்சித் தலைவர் (பி. 1800)

1880 – லுக்ரிடியா மோட், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1793)

1917 – லில்லியுகலானி, அவாய் அரசி (பி. 1838)

1993 – கப்டன் மயூரன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (பி. 1970)

1995 – சுந்தா, தமிழக எழுத்தாளர், கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் (பி. 1913)

1999 – சத்தியவாணி முத்து, தமிழக அரசியல்வாதி (பி. 1923)

2004 – யாசிர் அரஃபாத், பாலத்தீனத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1929)

2005 – பீட்டர் டிரக்கர், ஆத்திரிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1909)

2016 – கே. சுபாஷ், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours