இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்தூரில் நடைபெற்ற இன்றைய கடைசி போட்டியில் நியூசிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை ஒயிட்வாஷ் செய்த காரணத்தால் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

news reels

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

அசத்தும் இந்தியா:

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மட்டுமின்றி இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணி 2023ம் ஆண்டு முதல் பேட்டிங், பவுலிங் என்று அனைத்து துறைகளிலும் அசத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே தொடர்ச்சியாக 6 போட்டிகளில் அசத்தியுள்ளனர்.

ஐ.சி.சி. புதியதாக வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டியின் தரவரிசையில் இந்திய அணி 44 ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரத்து 10 பாயிண்ட்ஸ்கள் பெற்று முதலிடத்தில் உள்ளனர். அதாவது 114 ரேட்டிங்ஸ் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி 3400 பாயிண்ட்ஸ்களுடன் 113 ரேட்டிங்ஸ் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

10வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ்:

ஆஸ்திரேலிய அணி 3572 பாய்ண்ட்ஸ் பெற்றிருந்தாலும், 112 ரேட்டிங்ஸ் பெற்று மூன்றாவது இடம் பிடித்திருந்தனர். நியூசிலாந்து 3229 பாய்ண்ட்ஸ் பெற்று 111 ரேட்டிங்ஸ்களுடன் நான்காவது இடத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி 5வது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 6வது இடத்திலும் உள்ளது.

வங்காளதேச அணி 7வது இடத்திலும், இலங்கை அணி 8வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 9வது இடத்திலும், இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 10வது இடத்திலும் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் முறையே அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.  

மேலும் படிக்க: IND vs NZ, 3rd ODI: வீணான கான்வே சதம்..நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா…! மீண்டும் மிரட்டல் வெற்றி..!

மேலும் படிக்க: Shubman Gill ODI Record: மாஸ் காட்டும் சுப்மன் கில்…! பாபர் அசாமை சமன் செய்து அசத்தல்.. தவானை பின்னுக்கு தள்ளி மிரட்டல்..!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor