சிவகங்கை, -சிவகங்கை மாவட்டத்தில் பொங்கலுக்கு கரும்பை முழுமையாகஅரசு கொள்முதல் செய்யாததால் கரும்பு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கரும்பு கீழ,மேலச்சாலுார், எஸ்.புதுார் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிட்டிருந்தனர். பொங்கல் தொகுப்புக்காக அந்தந்த பகுதி விவசாயிகளிடம் கரும்பை கொள்முதல் செய்து வழங்க அரசு உத்தரவிட்டது. ஒரு கரும்பு கொள்முதல் செய்ய 33 ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்17 மாவட்டங்களில் 12 கோடி கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும், என தெரிவித்திருந்தார். சிவகங்கை மாவட்டத்தில் 4.19 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு கரும்பு வழங்கப்பட்டுள்ளது.

கரும்பு கொள்முதல் செய்ய குழு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்டது.சாலுார் விவசாயிகளிடம் கரும்பினை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. 25 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.

75 சதவீத கரும்பை கொள்முதல் செய்யாததால்,வெளிமார்க்கெட்டில்விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக கூறுகின்றனர். மேலும் தற்போது திருவிழாக்கள், மஞ்சுவிரட்டு நடக்கும் பகுதியில் ஒரு கரும்பு 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் மக்கள் வாங்குவதில்லை.

கரும்பு சாறு தயாரிக்கும்கடைகளில் விற்பனை செய்ய முயற்சித்தனர். இதில் சாறு அதிகம் இருக்காது என்பதால் வியாபாரிகள் வாங்கமறுக்கின்றனர்.

கரும்பு விவசாயிகள் தெரிவித்ததாவது:

ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவிட்டு பயிரிட்ட கரும்பை ஒரு ஆண்டாக பராமரிப்பு செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கல்பரிசு வழங்க கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட போது 27 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

விவசாயிகளிடம் மட்டுமே கரும்பு கொள்முதல் செய்தனர். இந்தஆண்டு புரோக்கர் தலையீடு காரணமாக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் குறைந்தது, கரும்பு பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துஉள்ளனர், என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper Combo
-->

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
%d bloggers like this:
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor