சம்பல்:பள்ளி முடிந்து வகுப்பறைக்குள் வைத்து தவறுதலாக பூட்டப்பட்ட 7 வயது சிறுமி 18 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டம் குன்னார் என்ற இடத்தில் ஆரம்ப பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பினர். ஆனால் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் 7 வயது சிறுமி மட்டும் வீடு திரும்பவில்லை.சிறுமியை தேடி அவரது தாய் பள்ளிக்கு சென்றார். மாணவர்கள் சென்றுவிட்டதாக அவரிடம் பதில் அளிக்கப்பட்டது.
அருகில் உள்ள வனப்பகுதியில் சிறுமியை தேடினர்.நேற்று காலை பள்ளியை திறந்த போது சிறுமி வகுப்பறைக்குள் இருந்தது தெரியவந்தது.சிறுமி இருப்பதை கவனிக்காமல் பள்ளி ஊழியர் வகுப்பறையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். 18 மணி நேரம் அந்த சிறுமி வகுப்பறைக்குள்ளேயே இருந்துள்ளார்.’அலட்சியமாக இருந்த பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.