புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்: SIR என்பது ஆளும் கட்சியின் அரசியல் சூழ்ச்சி - மாநிலம் முழுவதும் தவெக ஆர்ப்பாட்டம்! TVK Protest Across Tamil Nadu Against SIR: Pussy Anand Slams DMK for Political Conspiracy.
ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைக்கும் முயற்சி.. SIR வாக்காளர் திருத்தத்தைக் கண்டித்து தவெக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று, ஆளும் கட்சிக்குச் சாதகமான அரசியல் சூழ்ச்சி நடப்பதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 8 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இந்த நடவடிக்கையால் ஏராளமான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழப்பார்கள் என்று கூறி, தமிழகத்தில் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தார். வாக்காளர் பட்டியல...