`17 பாலிவுட் பிரபலங்களுக்குக் குறி'- ரூ.200 கோடி துபாய் திருமணம்; கொண்டாட்டத்தில் வெடித்த பூதாகரம்!

Estimated read time 1 min read

சத்தீஷ்கரில் ஜூஸ் வியாபாரம் செய்து ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் சவுரப் சந்திரேகர். இவர் தன் நண்பருடன் சேர்ந்து மகாதேவ் புக் ஆப் என்ற மொபைல் ஆப் ஒன்றை நடத்தி வருகிறார்.

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான இந்த சூதாட்ட ஆப்பில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். இதில் கிடைக்கும் பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் பெற்று மோசடி செய்தது தொடர்பாக அமலாக்கப்பிரிவு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து விசாரித்து வருகிறது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் 200 கோடி ரூபாய் செலவு செய்து ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்களை அழைத்து சவுரப் தனது திருமணத்தை நடத்திப் பரபரப்பை ஏற்பத்தினார்.

டைகர் ஷெராப்

இதையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மகாதேவ் மொபைல் ஆப் உரிமையாளர்கள் அலுவலகங்களில் சமீத்தில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டை தொடர்ந்து ரூ.417 கோடியை முடக்கி இருக்கின்றனர். ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணமோசடி செய்திருப்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சவுரப் தனது திருமணத்தில் ஆடல், பாடலுக்காக ஏராளமான பாலிவுட் பிரபலங்களை மும்பையில் இருந்து தனி விமானத்தில் அழைத்து சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடிகர் டைகர் ஷெராப், நடிகை சன்னி லியோன், பாடகி நேகா கக்கர், ஆதிப் அஸ்லாம், நுஷ்ரத் பரூச்சா உட்பட 17 பாலிவுட் பிரபலங்கள் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடிப் பாடியிருக்கின்றனர்.

இதனால் அமலாக்கப்பிரிவு இப்போது அவர்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. விரைவில் சன்னி லியோன், டைகர் ஷெராப்பிற்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிலர் மகாதேவ் ஆப்பை யூடியூப்பில் விளம்பரப்படுத்தியுள்ளனர். இந்த விளம்பரத்தில் யாரெல்லாம் நடித்து இருக்கின்றனர் என்ற விபரத்தை அமலாக்கப்பிரிவு வெளியிடவில்லை.

ஆனால் பிரபல நடிகர் ஒருவரும், நடிகை ஒருவரும் மகாதேவ் ஆப் விளம்பரத்தில் நடிக்க பணம் வாங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருமண நிகழ்ச்சி

மொபைல் ஆப் உரிமையாளர்கள் இரண்டு பேரும் துபாயில் இருக்கின்றனர். சூதாட்டம் சட்டப்பூர்வமானதாக அறிவிக்கப்பட்டுள்ள துபாயில் இந்த மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 30 இடங்களில் சூதாட்டம் நடப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுரப் இந்தியாவில் இருந்தபோது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டு தனது நண்பர் ரவி என்பரோடு துபாய் சென்றார். அங்கு கடை நடத்திக்கொண்டு சூதாட்ட மொபைல் ஆப் உருவாக்கி அங்கேயே பதிவு செய்து இந்தியாவில் அதனை அறிமுகம் செய்தார். சவுரப் தனது திருமண ஏற்பாடுகளை கவனிக்க நியமிக்கப்பட்ட ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனிக்கு மட்டும் ரூ.112 கோடி ஹவாலா முறையில் கொடுக்கப்பட்டுள்ளார்.

இது தவிர விருந்தினர்கள் துபாய் ஹோட்டலில் தங்கியதற்கு கட்டணமாக ரூ.40 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு இந்தியாவில் இருந்து துபாய் செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்த போபாலை சேர்ந்த ரேபிட் டிராவல்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் கம்பெனியிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.கொல்கத்தாவை சேர்ந்த விகாஸ் என்பவர் ஹவாலா பணபரிவர்த்தனை தொடர்பான விவகாரங்களை கவனித்துக்கொண்டு இருந்தது கண்டறியப்பட்டது. அங்கும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சத்தீஷ்கர் மாநில போலீஸாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் சவுரப் தரப்பில் ரூ.60 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் கொடுத்துள்ளனர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours