Posts

Showing posts from September, 2022

விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது..!

Image
சேலம்: ஓமலூர் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட முதியவரை அதிரடியாக தொளசம்பட்டி போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மானத்தாள் கிராமம், கங்காணிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் ராஜாக்கண்ணு. இவர் தனது தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டு இருப்பதாக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக கஞ்சா பயிரிட்ட முதியவரை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் தாரமங்கலம் ஆய்வாளர் தொல்காப்பியன் உள்ளிட்டோர் அந்தப் பகுதிக்கு சென்று விவசாயி ராஜாகண்ணுவை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரது விவசாய தோட்டத்தில் இருந்து சுமார் கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ராஜாக்கண்ணுவை கைது செய்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Private School : ஒரு தனியார் தொடக்கப் பள்ளி உரிய அனுமதி இல்லாமல் இயங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு...!

Image
சேலம்: சேலம் தொளசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளி உரிய அனுமதி இல்லாமல் இயங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ளது தொளசம்பட்டி. இங்கே உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளி உரிய அனுமதி இல்லாமல், எவ்விதமான அடிப்படை வசதிகளும் இன்றி இயங்குவதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொளசம்பட்டி வாரச்சந்தைக்கு கிழக்கு புறமாக செயல்பட்டு வரும் தனியார் தொடக்கப் பள்ளியின் மீதுதான் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக உரிய ஆவணங்கள், அனுமதி இல்லாமல் இப்பள்ளி இயங்கி வருவதாகவும், இதுசம்பந்தமாக அரசு அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பியும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் புலம்புகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் கொரோனா வியாதிக்கு அடுத்தபடியாக டெங்கு,ப்ளூ காய்ச்சல் என மக்கள் மீது வியாதிகள் பெரும் தாக்குதல்களை தொடுத்து வருகிறது. இப்பள்ளிக்கு சரியான போக்குவரத்து வசதி கிடையாது, காலை நேரத்தில் பள்ளிக்கு பேருந்தில் ஏற்றி வரும் குழந்தைகளை தூரத்தில் இறக்கிவிட்டு, சேறும் சகதியுமான, தண்ணீர் தேங்கி நிற்கும் சாலையி...

"வாலாஜா அரசு தலைமை மருத்துவர்கள்" தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

Image
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைத்தும் அரசு மருத்துவ சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மருத்துவர்கள் அணைவரும் கோரிக்கை அட்டையை சட்டையில் குத்தியவாறு பணி செய்தனர். சுமார் 6 நாட்களாக தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தமிழக அரசுக்கு கவனம் ஈர்க்கும் விதமாக வருகின்ற 25ஆம் தேதி சென்னையில் தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தின் வெளியே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் அன்று அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர்கள் கீர்த்தி, இளங்கோ, கோபிநாத், ஆகியோர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் டாக்டர்கள் சென்னை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தனர். - ஆர்.ஜே.சுரேஷ்குமார்  

"நான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணமும் தோன்றுகிறது, அப்படி ஏதும் நிகழ்ந்தால் மேற்கண்ட இராசிபுரம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தான் அதற்கு முழு காரணம்" - வாகன உரிமையாளரின் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!

Image
நாமக்கல்: என்னுடைய பெயர் S.கார்த்திகேயன் (டிரைவர் & உரிமையாளர்) நான் ராசிபுரத்தில் தற்போது வசித்து வருகிறேன். என்னுடைய வண்டி எண் TN-28-BU 5097 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ராசிபுரம் கோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் வண்டி ஓட்டி கொண்டிருக்கின்றேன், சமீப காலமாக மேற்கண்ட குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி செய்யும் உயர் அதிகாரிகள் என் மீது ஏதோ காழ்புணர்ச்சி கொண்டு எனது வண்டியை அரசு பணிகளுக்கு பயன்படுத்துவதில்லை. நான் கேட்டதற்கு நீ எங்களை அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்று கூறுகின்றனர். நானும் சில நேரங்களில் அதிகாரிகள் சொல்லுகிறார்கள் என்று அவர்களுடைய சொந்த வேலைகளுக்கும் அவர்களுடன் எனது வாகனத்தில் சென்றும் வந்தேன், இருந்தபோதிலும் எனக்கு அதிகளவில் மன உளைச்சலை கொடுத்ததால் நான் சில நேரங்களில் அதிகாரிகளின் அரசாங்க வேலை போக மற்ற அவர்களின் தனிப்பட்ட வேலைகளுக்கு நான் செல்வதில்லை மீண்டும் என்னை என்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு வரச் சொல்கிறார்கள், எனக்கு இதில் உடன்பாடு இல்லை . இதனால் என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு மேற்கண்ட அதிகாரிகள் என் வண்டியை அரசு பணிகளுக்கு எடுத்து பயன்படுத்தாமல் எ...

நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை இரவு நேரத்தில் இயக்குவது நிறுத்தம்..! தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி கோரிக்கை..!!

Image
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை இரவு நேரத்தில் இயக்குவது நிறுத்தம்: உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை இயக்கிட தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி கோரிக்கை. விபத்தில் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கும், பிரசவத்திற்காக கர்ப்பிணிகள் மற்றும் உயிர்காக்க போராடும் நோயாளிகளுக்கும், அவசர காலத்தில் பெரிதும் உதவியாக இருப்பது 108 ஆம்புலன்ஸ் திட்டமாகும். GVK EMRI – என்ற தனியார் நிறுவனம் 108 சேவையை நேரடியாக நடத்துகின்றது. (உயிர்காக்கும் இச்சேவை பணியை அரசே ஏற்று நடத்தாமல் தனியார் நிறுவனம் நடத்துவது வேதனையானது) இந்த தனியார் நிறுவனம் நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை -TN20G2462 , குமாரமங்கலம் -TN20G2399 , எர்ணாபுரம் – TN20G2246 , வளையப்பட்டி -TN20G3549 இராசிபுரம் -TN20G2676 , திருச்சங்கோடு -TN20G1857, சேந்தமங்கலம் – TN20G2927 ஆகிய 108 ஆம்புலன்ஸ்களை இரவு நேரங்களில் இயக்காமல் 108 ஆம்புலன்ஸ் சேவைகான முடக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் சதி திட்டத்தில் , GVK EMRI அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இந்த நிற...

சாலை தேடும் அளவிற்கு குவிக்கப்படும் மண்கள்..! உயிர் காவுகளும் விபத்துகளும் அதிகரிப்பு..! காரணம் என்ன?

Image
சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து இரும்பாலை வழியாக சேலம் செல்லும் சாலையில் சமீப காலமாக மழையின் தாக்கத்தினால் ஏரியில் உள்ள மண்கள் சாலையில் குவிக்கப்பட்டன, இதனால் அடுத்தடுத்த நடந்த விபத்துக்களால் சிலர் சிறுகாயம் அடைந்தனர், படுகாயம் அடைவதை தடுப்பதற்கு இவ்வு முயற்சி. சாலைகளில் எதனால் இவ்வளவு மண்கள் குவிப்பும் மற்றும் போக்குவரத்து நெரிசலும் என்ன காரணமாக இருக்கும் என ஆராய்ந்த போது கிடைத்த சில தகவல்கள் இதோ. காவேரி ஆற்றின் நீரை ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலைகள் நடந்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது, அதன்பின் வேலைகள் அவ்வப்போதே நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிய வருகிறது. 2022 மழைக்காலங்களில் காவேரி ஆற்றில் நீர் அதிகரித்த காரணத்தினால், முழுமையடையாத வாய்க்கால் வழியாக தாரமங்கலத்தை மூழ்கவும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியது எனவும் கூறப்படுகிறது. தாரமங்கலம் முழுவதும் தண்ணீர் தேங்கிய பல இடங்களில் நகராட்சி ஊழியர்களின் உதவியோடு தண்ணீரை வெளியேற்ற சாலை ஓரங்களில் உள்ள மண்களை அப்புறப்படுத்தி சாலையில் மேல் குவிய பட்டுள்ளது எனவும் தெரியப்படுகிறது. மேலும் இதனால் விபத்த...

A.M.பழனிசாமி இல்ல திருமண விழா அ.தி.மு.க. வினர் நேரில் வாழ்த்து..!

Image
சேலம்: தமிழக முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அருளாசியுடன், தாரமங்கலம் அத்திக்கட்டானூர் A.M.பழனிசாமி அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்பாக்கி கிருஷ்ணன், கோவிந்தன், ராஜா, சிவபெருமாள், வெற்றிவேல், பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், SSKR ராஜேந்திரன், தாரமங்கலம் செங்கோடன், காங்கேயன், ராஜி, மணிமுத்து, பாலசுப்ரமணியம், துரைராஜன், தங்கவேல், அருணகிரி, கோவிந்தராஜூ, விஏஓ உதவியாளர் வெங்கடேஷ், கவிப்பிரியா, கௌசிகா, சர்வேஷ் உள்பட மற்ற கட்சி பிரமுகர்களும் பலர் கலந்து கொண்டு மணமக்கள் S.வேல்மணி DCE. G.பானுமதி DCE ஆகியோரை வாழ்த்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா - தாரமங்கலத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்..!

Image
சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அண்ணா பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.   இன்று காலை 10 மணியளவில் தாரமங்கலம் அறிஞர் அண்ணா உருவ சிலைக்கு மாலைகள் அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தியவாறு தொடங்கப்பட்ட இவ்விழாவில் மாநில அவை உறுப்பினர் – மேட்டூர் நகர கழகச் செயலாளர் N. சந்தரசேகர், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் S. சுந்தரராஜன், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினரும் – அம்மா பேரவை மாவட்ட செயலாளர் R.மணி, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் G. சித்ரா, வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் M.இராஜமுத்து, சங்ககிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் S. ராஜா, ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால்பக்கிக்கிருஷ்ணன், தாரமங்கலம் தெற்கு ஒன்றியம் சின்னுசாமி, தாரமங்கலம் கிழக்கு ஒன்றியம் மணிமுத்து, தாரமங்கலம் நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியம், நன்றி உரை – தாரமங்கலம் நகர கழக அவைத்தலைவர் S.P. கோவிந்தராஜு மற்றும் பல தொண்டர்கள் கலந்து கொண்டாடினர். புகைப்படம்: ஈழம் சுரேஷ் – அறம் செய் மீடியா