`பா.ஜ.க-வால்தான் அ.தி.மு.க எதிர்க்கட்சியாகவே இருக்கிறதென்ற அளவுக்கு பேச தொடங்கிவிட்டனரே!’
“ இதெல்லாம் காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை. 31 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்து சரித்திர சாதனைகள் செய்த அ.தி.மு.க-வை பார்த்து வரலாறே இல்லாத பா.ஜ.க-வினரின் கருத்து வேடிக்கையானது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மக்கள் விரோத ஆட்சி செய்யும் ஊழல்பேர்வழி தி.மு.க-வை விட்டுவிட்டு அதிகாரத்தில் இல்லாத அ.தி.மு.க-வை விமர்சிக்கிறார் என்றால், தி.மு.க-வின் பி-டீம்தான் அண்ணாமலை. இப்போதைக்கு அண்ணாமலைக்கு எஜமான் ஸ்டாலின்தான்”
“கார் பந்தயம் நடத்தும் இடத்தை மாற்றச் சொல்வது நியாயமான கோரிக்கைதான். ஆனால் நடத்தவே கூடாது என்கிறீர்களே!”
“வரி மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்.. ஆசிரியர்கள், செவிழியர்கள் போராடுகிறார்கள்.. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. சென்னையின் சாலைகளைச் சீரமைக்க வக்கில்லை. பருவமழை குறித்தும் மழைநீர் வடிகால் பணிகள் பற்றியும் கவலையில்லை. ஆனால் இத்தனை பிரச்னைக்கு மத்தியில் பிடில் வாசிக்கும் நீரோ மன்னரைப்போல கார் பந்தயம் நடத்துகிறார்கள் ஸ்டாலினும் அவரின் மகன் உதயநிதியும். ஆனால் எதற்கெடுத்தாலும் வெங்காய விளக்கத்தை மட்டும் கொடுத்துவிடுகிறார்கள். பா.ஜ.க-வும் சரி, தி.மு.க-வும் சரி இரண்டு கார்பரேட் அரசாங்கங்களும் மக்களை முட்டாளாக்கவே முயல்கின்றன”
“தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் முரண்பாடுகள் குறித்துப் பேசும் நீங்கள், ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் பங்கு கேட்பதை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்… ஆட்சியில் பங்கு விவகாரத்தில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன?”
“கூட்டணிக் கட்சிகளின் எந்தக் கோரிக்கையையும் தி.மு.க அரசு கண்டுகொள்வதில்லை. கூட்டணிக் கட்சியான வி.சி.க கொடி ஏற்றுவதில்கூட சிக்கலைச் சந்திக்கிறது. இப்படி பல்வேறு முரண்களை கொண்ட அந்தக் கூட்டணி என்றைக்கு வெடிக்குமோ தெரியவில்லை. அதேசமயம் எங்கள் கூட்டணிக்கு யார் யாரெல்லாம் வருவார்கள் என்பது குறித்து, தேர்தல் சமயத்தில் தலைமை முடிவெடுக்கும். ஆட்சியில் பங்கு குறித்து கேட்கிறீர்கள், ஆனால் எந்தக் காலத்திலும் தனித்தன்மையோடு ஆட்சியமைக்கிற வல்லமை பெற்ற கட்சிதான் அ.தி.மு.க.”
“பா.ஜ.க-வுடன் தி.மு.க ரகசிய கூட்டணி என்கிறீர்கள்… எதனடிப்படையில்?”
“ `பா.ஜ.க-வுடன் கூட்டணியா?’ என்ற கேள்விக்கு, `அது குறித்து தலைமைதான் முடிவெடுக்கும்’ என்கிறார் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி. கூட்டணி இருக்காது என்று சொல்ல மறுக்கிறார்கள் ஏனில் அதனை ’ரகசிய உறவு’ என்பதில் தவறில்லையே!”
+ There are no comments
Add yours