இந்தியப் பெருநிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்ததுபோக, தற்போது நோக்கியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்து வருவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள். ஆனால், அதே நோக்கியா நிறுவனம் கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தொடங்கிய தனது தொழிற்சாலையைப் பாதியில் மூடிவிட்டு அங்குப் பணியாற்றிய ஊழியர்களை வாழ்வாதாரமின்றித் தவிக்கவிட்டுச் சென்றதற்கு முதல்வர் என்ன பதில் கூறப்போகிறார்? ஆனால், தற்போது இதுபோன்ற நிரந்தரமற்ற பணிகளிலும் தமிழர் அல்லாத வடவர்களையே முழுக்க முழுக்கத் தனியார் நிறுவனங்கள் பணியமர்த்தும்போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளுக்காகக் குடியேறிய வடவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமாகும்.
சென்னை, கோவை, உள்ளிட்ட மாநகரங்கள், திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் மட்டுமின்றித் தமிழ்நாட்டின் கிராமங்கள் வரை வடவர்களையே பணியமர்த்தும்போக்கு அதிகரித்து வருகிறது. அவ்வாறு தமிழ்நாட்டிற்கு வரும் பிறமாநிலத்தவர் விரைவாக குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று பெற்று நிரந்தரமாகக் குடியேறுகின்றனர். மேலும், வாக்காளர் அட்டையும் பெறுவதால் தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலாகவும் வடவர்கள் உருவெடுத்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் யாவும் பறிக்கப்படுவதோடு மட்டுமின்றி எஞ்சியுள்ள அரசியல் அதிகாரத்தையும் வடவர்களிடம் முற்றாக இழந்து, தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே உடைமைகள், உரிமைகளற்ற அகதிகளாக, அடிமைகளாக வாழும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.மேலும், தமிழ்நாட்டில் குடியேறும் வடவர்களால் நாளுக்குநாள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களும் அதிகரித்து அதனால் சட்டம் – ஒழுங்கும் மிகமோசமான நிலையை எட்டியுள்ளது.
+ There are no comments
Add yours