AK 64 Movie Director : தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறக்கும் நடிகர்களும் ஒருவராக இருக்கிறார், அஜித் குமார். முன்னர் போல இல்லாமல் வருடத்திற்கு ஒரு படம் மட்டும் நடித்துக் கொடுக்கும் அஜித், அவ்வப்போது தனக்கு பிடித்த விஷயங்களையும் செய்து வருகிறார். சுமார் 25 ஆண்டுகளாக, கோலிவுட்டில், விஜயா? அஜித்தா? என்ற போட்டி நிலவி வந்தது. ஆனால், வெகு விரைவிலேயே திரை உலகில் இருந்து விலகி விஜய் அரசியலுக்கு செல்வதால் இனி, அஜித்திற்கு போட்டி யார் என்ற கேள்வியும் நிலவு வருகிறது. இந்த நிலையில் அஜித்குமாரின் 64 ஆவது படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

பேக் to பேக் படங்கள்: 

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு துணிவு படம் வெளியானது. அதன் பிறகு அவர் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதை தவிர படம் குறித்த அப்டேட்டுகள் மிகவும் தாமதமாகத்தான் வெளியாகின. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை எடுத்து அவர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும், குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களில் தொடர்ச்சியாக நடித்த அஜித், தனது 64ஆவது படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

 

ஏகே 64:

ஏகே 64 படத்தை யார் இயக்குவது என்பது குறித்த போட்டி தற்போது நிலவி வருவதாக திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்தவுடன் அஜித், இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டியில் இயக்குனர்கள்: 

அஜித்தின் 64ஆவது படத்தை இயக்க, தமிழ் திரையுலகின் 3 முக்கிய இயக்குனர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் வெற்றிமாறன். இவர் அஜித்திற்கு என ஒரு கதையை தயார் செய்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், அஜித்தை நேரில் சந்தித்து இந்த கதையை இவர் சொன்னதாகவும், அஜித்தும் இவருக்கு கிரீன் சிக்னல் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் அவை அனைத்தும் வெறும் வதந்தி என தகவல் வெளியானது. 

AK 64 Directors

வெற்றிமாறனை அடுத்து அஜித்தின் 64வது படத்தை இயக்குவதாக கூறப்பட்ட இயக்குனர், சிறுத்தை சிவா. ஏற்கனவே அஜித்துடன் இணைந்து, விசுவாசம், விவேகம், வேதாளம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய சிவா, இன்னொரு முறையும் அவருடன் கைகோர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிறுத்தை சிவா, பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர், இந்தியில் படம் இயக்க சென்று விட்டாள் அஜித்தின் 64 ஆவது படத்தை இயக்க இன்னொரு இயக்குனர் ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா? 

யார் அந்த இன்னொரு இயக்குனர்? 

பெரிதாக படங்களை இயக்கவில்லை என்றாலும், தான் இயக்கிய படங்கள் அனைத்தையும் ஹிட் ஆக்கி இருப்பவர் மோகன் ராஜா. தனி ஒருவன் படம் மூலம் தனித்துவமான இயக்குனர் என்ற பெயரை பெற்ற இவர், அஜித்தின் 64 வது படத்தை இயக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா ஒருவேளை இந்த படத்தை இயக்க வில்லை என்றால், அஜித்துடன் இணைந்து முதன்முறையாக பணிபுரியும் வாய்ப்பு மோகன் ராஜாவிற்கு கிடைக்கும். 

மேலும் படிக்க | ‘விடாமுயற்சி’ படத்திற்காக அஜித்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *