தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா காரில் வந்து கொண்டிருக்க ஐஸ்வர்யா வழி மறித்து வம்பிழுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ரம்யா ஐஸ்வர்யாவின் சதியை மீறி ஆட்டோவில் கிளம்பி வர அவளது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்று ஹாஸ்பிடலில் இருந்து போன் வருகிறது. ஏற்கனவே ஒருமுறை இதே போல் போன் காலில் ஏமாற்றியதால் ரம்யா அதை நம்ப மறுக்க டாக்டரே போனை வாங்கி உண்மையை சொல்ல பதறியடித்து ஓடுகிறாள். தீபாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி விட இங்கே கல்யாண நாள் கொண்டாட்டம் நடந்து முடிகிறது. 

ஹாஸ்பிடலுக்கு வரும் தீபா, கார்த்தி

அதன் பிறகு தீபாவும் கார்த்தியும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர், ரம்யாவின் அப்பாவை பார்த்து விட்டு கிளம்பி வருகின்றனர். இந்த நேரம் அங்கு ரம்யா இல்லாமல் இருக்க இவள் மேலே வந்ததும் தீபாவும் அவளுடைய கணவரும் வந்துட்டு போனாங்க என்று சொல்ல ரம்யா வெளியே ஓடி வர இவர்கள் லிப்ட்டுக்குள் சென்று விடுகின்றனர். இதனால் ரம்யா படிக்கட்டில் இறங்கி வர லிப்டில் இருந்து வெளியே வந்த தீபா தவறி விழ போக கார்த்திக் அவளை தாங்கி பிடிக்க அதை பார்த்து விடும் ரம்யாவுக்கு கார்த்திக் தான் தீபாவின் புருஷன் என்பது தெரிய வருகிறது. 

இதனையடுத்து ரம்யா அப்பாவிடம் கார்த்திக் குறித்து சொல்ல அவங்க தான் உன்னை முதலில் பொண்ணு பார்க்க வந்தாங்க, அப்போ நீ தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்ட என்று சொல்கிறார். இதனால் இரவெல்லாம் தூக்கமின்றி தவிக்கிறாள், மறுபக்கம் ரியா ஒருவனை கூப்பிட்டு மீனாட்சி அவுட் ஹவுசில் தங்கி இருக்கா, நீ அங்க போ நான் திருடன் திருடனு கத்துவேன். அப்போ நீ மீனாட்சி கூப்பிட்டு தான் வந்ததாக சொல்லி எஸ்கேப் ஆகிடு என்று சொல்கிறாள். 

மேலும் படிக்க | Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்

இதனையடுத்து அதே போல் ரியா நைட் நேரத்தில் திருடன் திருடன் என கத்த இவள் ஏற்பாடு செய்தவன் வராத நிலையில் ஆனந்த், அருண் என எல்லாரும் கூடி விடுகின்றனர். அதன் பிறகு அவன் ரியா ரூமில் இருந்து வெளியே வந்து ரியா சொல்லி தான் வந்ததாக சொல்ல ரியா அதிர்ச்சி அடைகிறாள், அதன் பிறகு இவன் மீனாட்சி அக்கா ரூமுக்குள்ள போனதை நான் பார்த்தேன், உண்மையை சொல்லு போலீசில் பிடித்து கொடுத்துவேன்னு சொன்னதும் ரியா தான் இப்படி பண்ண சொன்னதாக உண்மையை உடைக்கிறாள். இதனால் ஆனந்த் ரியாவை பிடித்து அறைந்து விடுகிறான். 

பி.ஏ -வை அறையும் ரம்யா

எல்லாரும் உனக்கு எதுவோ இந்த வேலை என்று ரியாவை மோசமாக திட்டுகின்றனர், அடுத்த நாள் காலையில் ஆபீஸ் வரும் ரம்யா எப்படியாவது கார்த்தியை அடைய வேண்டும் என்று முடிவெடுக்கிறாள், பி.ஏ-வை கூப்பிட்டு அன்னைக்கு ஒரு லெட்டர் குடுத்தனே அதை கார்த்தியிடம் கொடுத்தயா என்று கேட்க அவன் ஆமாம் கொடுத்தேன் என்று சொல்கிறான், கார்த்தியும் பதிலுக்கு ஒரு லெட்டரை கொடுத்தார். அதை தான் உங்களிடம் கொடுத்ததாக சொல்ல ரம்யா அவனை அறைகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தில் ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *