அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என தெற்கு டகோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோம் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் ஜோ பைடன் வளர்ந்துவரும், இரண்டு வயதான ஜெர்மன் ஷெப்பர்டு நாய், இதுவரை வளர்ப்பு நாய் கமேண்டர், பைடனின் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 24 பேரைக் கடித்துள்ளதாகப் புகார் எழுந்தது. மேலும், பலரும் அந்த நாய் மீதான அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியதையடுத்து, கடந்தாண்டு அக்டோபரில் வெள்ளை மாளிகை மைதானத்திலிருந்து அந்த நாய் இடமாற்றப்பட்டதாக உயரதிகாரிகளிடமிருந்து அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் வெற்றி பெற்றால், துணை அதிபராக்கப்படுவார் எனப் பேசப்படும் தெற்கு டகோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோம், வெளியிட்ட இத்தகைய அறிவிப்பிற்கு வெள்ளை மாளிகையிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.  கிறிஸ்டி நோம், “என்னுடைய ஒரு வயதுடைய வளர்ப்பு நாய் மற்றவர்களை கடித்ததால், அதைச் சுட்டுக் கொன்றுவிட்டேன்” எனப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

நாய்

நாய்
கோப்புப் படம்

அதை பலரும் விமர்சித்த நிலையில், “ஜோ பைடனின் நாய் இதுவரை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 24 பேரைக் கடித்துள்ளது, அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பியதோடு, இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்திய நாய் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆளுநர் கிறிஸ்டி நோம் தனது `நோ கோயிங் பேக்” என்கிற புத்தகத்தில், “2025-ல் நான் துணை ஜனாதிபதியாகப் பெறுப்பேற்ற முதல் நாளில் என்னென்ன செய்வேன் என்கிற பட்டியல் ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறேன். அதில் நான் செய்யும் முதல் காரியம் ஜோ பைடனின் நாய் வெள்ளை மாளிகை மைதானத்தில் எங்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திவிட்டு, அதனை முதலில் சுட்டுக் கொல்ல உத்தரவிடுவேன்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *