தெலுங்கு, கன்னட சீரியல் உலகில் பரிச்சயமானவர் பவித்ரா ஜெயராம். இவர் ஜீ தெலுங்கில் வில்லியாக நடித்து பலரையும் கவர்ந்தவர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `மாரி’ தொடரின் தெலுங்கு வெர்ஷனில் இவர் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று அவருடைய குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த போது மெகபூபா நகர் அருகே கார் விபத்துக்குள்ளான நிலையில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

பவித்ரா ஜெயராம்

பவித்ராவுடன் மூன்று பேரும் காரில் பயணித்திருக்கின்றனர். அவர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கார் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து நடைபெற்றிருக்கிறது. கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பின் மீது மோதியுள்ளது. அப்போது ஹைதராபாத்திலிருந்து வனபர்த்தி நோக்கி வந்த பேருந்து காரின் மீது மோதியுள்ளது.

பவித்ரா மாரி தொடரின் தெலுங்கு ரீமேக் தொடரான `திரினாயினி (Trinayani)’ தொடரில் திலோத்தமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர். இவருடைய மரணம் தெலுங்கு, கன்னட சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பவித்ரா ஜெயராமிற்கு பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். 

பவித்ரா ஜெயராம்

ஆழ்ந்த இரங்கல்கள்!  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *