ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர் `நளதமயந்தி”. இந்தத் தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தவர் பிரியங்கா. `ரோஜா’ தொடர் வெற்றிக்குப் பிறகு பிரியங்கா ஜீ தமிழ் பக்கம் வந்தார். `சீதா ராமன்’ தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர் அந்தத் தொடரில் இருந்து வெளியேற, அவருக்குப் பதிலாக வேறொருவர் அந்தக் கதாபாத்திரத்தில் இணைந்தார். சிறிய இடைவெளிக்குப் பின் பிரியங்கா அதே சேனலில் `நளதமயந்தி’ தொடரில் இணைந்தார்.

நளதமயந்தி

நளதமயந்தி

திடீரென அந்தத் தொடரின் கதைக்களம் வேறொரு டிராக்கில் செல்ல இருப்பதாகவும் இனி அதில் ஶ்ரீநிதிதான் நடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஶ்ரீநிதியும் அந்தத் தொடரில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தி இருந்தார்.

ஆனால், பிரியங்காவோ தான் அடுத்த செட்டியூலுக்காகக் காத்திருந்ததாகவும், அவரிடம் சொல்லாமல் கதையின் டிராக்கை மாற்றியதற்கு என்ன காரணம் என்பது விரைவிலேயே தெரிய வரும் எனவும் கூறியிருந்தார். 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *