Priyanka Deshpande Marriage : தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் மிகவும் பிரபலமாக இருப்பவர், பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகளை, இவருக்காகவே பலர் கண்டுகளித்தனர். 100 சதவிகதம் எண்டெர்டெயினராக இருந்து மக்களை சிரிக்க வைக்கும் பிரியங்காவின் வாழ்க்கையிலும் வெளியில் சொல்ல முடியாத சோகங்கள் இருக்கத்தான் செய்கிறது. 

பிரியங்கா தேஷ்பாண்டே:

வெளி மாநிலத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், சென்னையில் பள்ளிப்படிப்பை தொடர்ந்ததால் பிரியங்காவிற்கு தமிழ் மொழி, சரளமாக வந்தது. இவர் தொகுத்து வழங்கி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், தி வால் உள்ளிட்டவை, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை ஆகும். இவர் தொகுப்பாளினியாக வளர்ந்து வந்த காலங்களில், இவருக்கு முன்பிருந்த டிடியின் நிகழ்ச்சிகள் முடிந்து போக, பிரியங்காவிற்கு ஜொலிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, பல்வேறு விருது நிகழ்ச்சிகளையும் மேடை நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியிருக்கிறார். 

பிக்பாஸில் பிரியங்கா..

பொதுவாக, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைபவர்கள் அனைவரும், கெட்டப்பெயருடன் வெளிவருவர் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறது. அதை தகர்த்தெறிந்தவர், பிரியங்கா. இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் முக்கிய போட்டியாளராக பங்கேற்றார். அந்த வீட்டிற்குள் இருந்த 100 நாட்களும் மக்களை பல வகைகளில் மகிழ்வித்து, அனைவரது மனங்களிலும் இடம் பிடித்தார். இறுதியில், ரன்னர் அப் பட்டத்தையும் வென்றிருந்தார். 

குக் வித் கோமாளியில்…

பிரியங்கா, சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனிலும் பங்கேற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் முக்கிய சமையல் குக்குளுள் ஒருவராக இருக்கும் இவர், நன்றாக சமைத்து நடுவர்களிடம் பாராட்டும் பெற்று வருகிறார். சமீபத்தில், இவர் நடிகை வனிதாவை “எப்போ கல்யாண சாப்பாடு போட போறீங்க?” என்று கேட்டு நக்கலடித்த வீடியோ க்ளிப் வைரலானது. 

மேலும் படிக்க | OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததா? 

பிரியங்கா தேஷ்பாண்டே, 2016 ஆம் ஆண்டு தனது நெடுங்கால காதலரான பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்ததாக 2022ஆம் ஆண்டு தகவல்கள் வெளியானது. ஆனால், இவை அனைத்தும் வெறும் வதந்தியே என்று கூறிவிட்டார் பிரியங்கா. சமீபத்தில் தொகுப்பாளர் அர்ச்சனா, சில விஷயங்களை பேசும் போது, நா தழுதழுக்க பேசினார். “உன் வாழ்வில் வரும் ஒருவன், கண்டிப்பாக உன்னை முழுமையாக காதலித்து, உனக்கு நிறைய குழந்தை செல்வங்களை கொடுக்க வேண்டும்” என்று அர்ச்சனா அவரை வாழ்த்தினார். இதனால், பிரியங்கா அவரது கணவரை விட்டு பிரிந்ததை அனைவரும் உறுதிப்படுத்தினர். 

2வது திருமணம்?

பிரியங்கா, தனது அம்மாவிற்காக, இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சீரியல் தயாரிப்பாளர் ஒருவரை இவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | மீண்டும் டப்பிங் சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்! எந்த சீரியலை எந்த நேரத்தில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *