விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `பாக்கியலட்சுமி’. பல பாசிட்டிவ், நெகட்டிவ் கலந்த விமர்சனங்கள் இந்தத் தொடருக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. அதே போல இந்தத் தொடர் சார்ந்த ட்ரோல்ஸ்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்தத் தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த விஜே விஷால் தற்போது அந்தத் தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார். 

பாக்கியலட்சுமி விஷால்

விஷால் தொகுப்பாளராக வேண்டும் என்கிற ஆசையில் தொடர்ந்து வாய்ப்புத் தேடி ஓடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அப்படித்தான் விஷாலுக்கு பாக்கியலட்சுமி தொடரும் அமைந்திருக்கிறது. இது அவருடைய முதல் தொடர். ஆனாலும், அத்தனை இயல்பாய் நடித்து மக்களிடையே பரிச்சயமானார். 

இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விஷால் விலகியது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விலகியதற்கான காரணம் குறித்து அவர் இன்னமும் தெரிவிக்கவில்லை. அவருக்கு பதிலாக எழில் கதாபாத்திரத்தில் `ஈரமான ரோஜாவே 2’வில் நடித்திருந்த நவீன் நடிக்கிறார். 

நவீன்

கடந்த ஆண்டு `ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியையும் இவர் ரக்‌ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார். விஷாலின் இந்த திடீர் விலகலுக்கான காரணம் என்ன எனப் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். விஷால் கடந்த ஆண்டு `குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *