தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே இருக்கிறது. சரியாக ஒரு வாரத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களும் ஓய்ந்துவிடும். இத்தகைய சூழலில், ஒட்டுமொத்த சிஸ்டமும் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

ராகுல் காந்தி

நேற்று மாலை பஞ்ச்குலாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய ராகுல் காந்தி, “நான் பிறந்த நாள் முதல் இந்த சிஸ்டத்துக்குள் இருக்கிறேன். சிஸ்டத்துக்குள்ளிருந்து நான் வந்திருப்பதால், அது எப்படி இயங்குகிறது, யாருக்குச் சாதகமாக இருக்கிறது, யாரைப் பாதுகாக்கிறது, யாரைத் தாக்குகிறது என்பது எனக்குத் தெரியும். என்னுடைய பாட்டி, தந்தை மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக இருந்தபோது, நான் பிரதமர் இல்லத்துக்குச் செல்வது வழக்கம்.

ராகுல் காந்தி

அதனால், இந்த சிஸ்டம் எப்படி இயங்குகிறது என்பது எனக்குத் தெரியும். இந்த சிஸ்டம் அதன் ஒவ்வொரு மட்டத்திலும் எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓ.பி.சி சமூகத்தினருக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட், ஊடகம், அதிகாரத்துவம், கல்வி, நீதித்துறை, ராணுவம் உள்ளிட்ட பிற அமைப்புகளில் இந்த 90 சதவிகித மக்களின் பங்கேற்பு இல்லை. அதற்கேற்றவாறு தகுதி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், 90 சதவிகிதத்தினருக்குத் தகுதி இல்லை என்றால் எப்படி… அவ்வாறு இருக்கவே முடியாது. இதில் ஏதோ குறை இருக்கிறது.

இந்தியாவில் மக்கள்தொகையைக் கணக்கெடுத்தால், 90 சதவிகித மக்கள் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என்று தெரியவரும். இதுதான் உண்மை, இதை யாரும் எதிர்க்க முடியாது.

ராகுல் காந்தி

எனவே, இந்த 90 சதவிகித மக்களின் அதிகாரப் பங்கேற்பு என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி. கார்பரேட்டாக இருந்தாலும், அதிகாரக் கட்டமைப்பாக இருந்தாலும் அதில் 90 சதவிகித மக்களின் குரல் ஒலிக்கவில்லை” என்றார்.

நரேந்திர மோடி

ராகுல் காந்தியின் இத்தகைய குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றிய பிரதமர் மோடி, “காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) பேசும்போது சில சமயங்களில் உண்மைகள் வெளிவரும். அந்த வரிசையில் தற்போது, தன்னுடைய பாட்டி, அப்பா, அம்மா காலத்தில் உருவான சிஸ்டம் எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி மக்களுக்கு எதிராக இருந்தது என்பதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *