கோட் பாடல்… ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்
15 ஏப், 2024 – 16:24 IST

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் விசில் போடு என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய்யே அந்த பாடலை பாடி இருப்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. 24 மணிநேரத்திற்குள்ளேயே 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில் இந்த பாடல் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மது பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் இருப்பதாக ஆன்லைன் மூலம் டிஜிபி அலுவலகத்தில் ஒருவர் புகார் அளிக்கிறார்.
அதில், விசில் போடு பாடலில் அதிரடி கலக்கட்டுமா, சேம்பைனுதான் தொறக்கட்டுமா, மைக்கை கையில் எடுக்கட்டுமா, இடி இடிச்சா என் வாய்ஸ்தான், வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான். குடிமகன் தான் நம் கூட்டணி, இரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் வெறியை தூண்டும் வகையில் அந்த பாடல் வரிகள் இடம்பெற்றுகிறது என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் நடித்த லியோ படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் இடம்பெற்றிருந்தது. விஜய்யின் இது போன்ற செயற்பாடு நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours