Anna Zee Tamil Serial Today Episode Update: திரைப்படங்களை போன்று தொலைக்காட்சி தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கடும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக, நெடுந்தொடர்களாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியல்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு எபிசோட் விடாமல் தொடர்ந்து பார்க்க விரும்புவார்கள்.
இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களின் எபிசோட்கள் ஓடிடி தளங்களில் சில மணிநேரங்களிலேயே கிடைத்துவிடுகிறது. எனவே, ஒரு நாள் எபிசோடை பார்க்காவிட்டாலும் தங்களுக்கு இஷ்டமான சமயத்தில் ஓடிடி தளத்தில் அந்த எபிசோடை பார்த்துக்கொள்ள முடியும். சிலர் வார இறுதியில், ஒரே மூச்சில் அந்த வாரத்தின் அனைத்து எபிசோட்களையும் பார்க்கும் வழக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள்.
அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்
அந்த வகையில், தமிழில் பல தொலைக்காட்சிகள் விதவிதமான கதையம்சங்கள் கொண்ட சீரியல்களை ஒளிப்பரப்பு வருகின்றன. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியும் பல்வேறு சீரியல்களை ஒளிப்பரப்பி வருகின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், அண்ணா (Anna Serial). இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை (ஏப். 13) எபிசோடில் ஷண்முகம் அல்வாவையும் மல்லிகைப்பூவையும் வாங்கி வந்த நிலையில் இன்று (ஏப். 15) நடக்க போவது என்ன என்பது குறித்து இதில் காணலாம்.
மேலும் படிக்க | கல்யாணத்துக்கு ஓகே சொன்ன அஞ்சலி – சீதாராமன் சீரியல் அப்டேட்!
அதாவது, ஷண்முகம் மல்லிகைப்பூவையும் அல்வாவையும் டேபிள் மீது வைக்க சனியன் அதை அப்படி வைக்க கூடாது, நீங்க தான் உங்க பொண்டாட்டி தலையில் வைத்து விடணும் என்று சொல்ல ஷண்முகம் வாங்குனது பத்தலையா என்று கேட்க சனியன் நோட்ல அப்படி தான் இருக்கு என்று சொல்கிறான்.
கண்ணீர்விடும் ரத்னா
பிறகு தங்கைகள் நீயும் அண்ணி வந்ததும் மத்தவங்களை மாதிரி என்னை மறந்துட்டல, அன்னிக்கு மட்டும் மல்லிப்பூ வாங்கி வந்திருக்க என்று சொல்ல வைகுண்டமும் என்னப்பா இப்படி மாறிட்ட என்று கேட்க ஷண்முகம் எனக்கு எப்பவும் என் தங்கச்சிங்க தான் பர்ஸ்ட், அப்புறம் தான் மத்தவங்க எல்லாரும் என்று மல்லிப்பூவை எடுத்து எல்லாருக்கும் வைத்து விடுகிறான், பரணிக்கும் வைத்து விடுகிறான்.
இதனையடுத்து இசக்கி பாக்கியம், கனி ரத்னா ஆகியோர் ஓரிடத்தில் சந்தித்து கொள்கின்றனர், அப்போது ரத்தனாவுடன் வெங்கடேஷும் இருக்க இசக்கி என்ன ஜோடியாக சுத்தறீங்க என்று கலாய்க்க முத்துப்பாண்டி இங்கு வந்து விடுகிறான். வெங்கடேஷை பார்த்து என்னடா அவ கூட சுத்திட்டு இருக்க, புடிச்சு உள்ள போட்டுடுவேன் என்று மிரட்டுகிறான்.
வெங்கடேஷ் முதல் முறையாக நான் கட்டிக்க போற பொண்ணு கூட நான் இருக்கேன், உன்னால ஒன்னும் பண்ண முடியாது என்று எதிர்த்து பேச பாக்கியம் பிரச்னையை தடுக்க வெங்கடேஷை அனுப்பி வைக்க முத்துப்பாண்டி இந்த கல்யாணம் நடக்காது, எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று மிரட்ட ரத்னா கண்ணீருடன் வீட்டிற்கு வருகிறாள்.
காணத் தவறாதீர்கள்
ரத்னாவும் கனியும் அழுவதை பார்த்து பரணி என்னாச்சு என்று கேட்க நடந்தவற்றை சொல்லி அண்ணனுக்கு தெரிந்தா பிரச்சனையாகிடும் என்று சொல்ல பரணி அவனுக்கு தெரியணும் என்று சொல்கிறாள். பிறகு ஷண்முகம் ப்ரியாணியோடு வீட்டிற்கு வர எல்லாரும் டல்லாக இருக்க ஷண்முகம் என்னாச்சு என்று கேட்க பரணி நடந்ததை சொல்ல அரிவாளுடன் கிளம்புகிறான்.
பரணி அவனை தடுத்து நிறுத்தி இப்படி எல்லாத்துக்கும் அரிவாளை தூக்குறத விடு, கொஞ்சம் அறிவா யோசி என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிவின் பாலி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours