வரும் அக்டோபர் மாதம் தான் படம் வெளியாகிறது என்றாலும் கூட, ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜின் படத்திற்குச் செல்வதால், ‘வேட்டையன்’ படப்பிடிப்பு டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது.
சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இப்போது ரஜினியை வைத்து ‘வேட்டையன்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினியுடன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கின்றனர். அமிதாப் ஒரு கௌரவ தோற்றத்தில் வருகிறார். படத்தின் திருப்புமுனையான காட்சியில் அவரும் ரஜினியும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இதுவரை பல படங்களில் வில்லனாக மிரட்டி வந்த பகத் பாசில், இந்த படத்தில் வித்தியசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதுகுறித்து ‘வேட்டையன்’ வட்டாரத்தில் விசாரித்தால், ஆச்சரியமான தகவலைச் சொல்கிறார்கள். ரஜினி, பகத் காம்பினேஷனில் தியேட்டரே ரகளையாக இருக்கும். மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலுவை எப்படி ஒரு வித்தியாசமான கேரக்டரில் பார்த்தோமோ அப்படி, ‘வேட்டையன்’ படத்திலும் எதிர்பாராத ஒரு கதாபாத்திரத்தில் பகத் நடித்திருக்கிறார். காமெடியில் கலகலக்க வைத்திருக்கிறார். ஃப்ரெஷ்ஷான ஒரு பகத்தை எதிர்ப்பார்க்கலாம் என்கிறார்கள்.
![வேட்டையன்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-04%2F2e38f59c-ea3d-4526-8b62-1207251c42d4%2Ff6aef450-fff5-42fd-87d6-4bd58bd07b85.jpg?auto=format%2Ccompress)
அனிருத் இப்போது ‘வேட்டையன்’ தவிர, ‘தலைவர் 171’ படத்தின் பாடல் கம்போஸிங், ‘இந்தியன் 2’க்கான பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள், ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.23’ மற்றும் அஜித்தின் ‘விடா முயற்சி’க்கான பாடல்கள் என பிஸியாக இருக்கிறார். தேர்தல் முடிந்ததும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்குக் கிளம்புவதால், பாடல்களை அவர் கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.
+ There are no comments
Add yours