ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சி `டான்ஸ் ஜோடி டான்ஸ்’. இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று (14-04-24) ஒளிபரப்பப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை அக்ஷதா – நவீன் ஜோடி தட்டிச் சென்றிருக்கிறது. முதல் ரன்னர் அப் பட்டத்தை இப்ராஹிம் – அக்ஷிதாவும், இரண்டாவது ரன்னர் அப் பட்டத்தை கெளரி – விவேக் ஜோடியும் வென்றிருக்கிறார்கள்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `அண்ணா’. இந்தத் தொடரில் `வீரா’ கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த விஜே தாரா விலக அவருக்கு பதிலாக விஜே தர்ஷினி இணைந்தார். தற்போது அவரும் அந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் மிர்ச்சி செந்தில் `டான்ஸ் ஜோடி டான்ஸ்’ பைனல் நடந்து கொண்டிருந்த மேடையில் வைத்தே நடனம் மூலம் மக்களை ரசிக்க வைத்த கெளரி இனி வீராவாக எங்களுடைய `அண்ணா’ தொடரில் இணைகிறார் என்கிற தகவலை தெரிவித்தார். கெளரி தனது மகிழ்ச்சியை அந்த மேடையிலேயே வெளிப்படுத்தியும் இருந்தார்.

இவர் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ் சீரியல் உலகிற்கு புதிதாக அறிமுகமாக இருக்கிறார். அவருக்கு `டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நடிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
இயக்குனர் திருமுருகனின் தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். `கல்யாண வீடு’ தொடருக்குப் பிறகு எப்போது அவருடைய புதிய தொடர் வெளியாகும் என அவரது ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் திருமுருகன் அவருடைய `Thiru Tv’ யூடியூப் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் இந்தப் புத்தாண்டில் புதிய படைப்பு வரவிருக்கும் தகவலையும் ஷேர் செய்திருக்கிறார். குடும்பம் சார்ந்த திரைக்கதைகளை எதார்த்தமாக கையாள்வது அவருடைய சிறப்பு என்பதால் பலரும் ஆவலுடன் அவருடைய புதிய படைப்பிற்காக காத்துக் கொண்டிருப்பதாக கமென்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.
+ There are no comments
Add yours