Latest News Director Lokesh Kanagaraj Productions Next Movie Benz Directed By Bakkiyaraj Kannan Starring Raghava Lawrence

Estimated read time 1 min read

Latest News Lokesh Kanagaraj Next Movie :  தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து சில காலங்களே ஆகியிருந்தாலும், வெகு விரைவில் டாப் இயக்குநர்களின் லிஸ்டில் சேர்ந்துள்ளவர் லோகேஷ் கனகராஜ். இவர் திரையுலகிற்கு வந்து இன்னும் முழுதாக 10 வருடங்கள் கூட முடியவில்லை என்றாலும், இவருக்கென்று இப்போது பெரிய ரசிகர் பட்டாளமே சேர்ந்து விட்டது. அது மட்டுமன்றி, இதுவரை எடுத்துள்ள அனைத்து படங்களையும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆக்கியிருக்கிறார். இப்படி, இயக்கத்தில் ஒரு புறம் கலக்கி கொண்டிருக்க அடுத்ததாக சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். 

லோகேஷின் அடுத்த படம்..

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கடந்த ஆண்டு வெளியான ‘ஃபைட் க்ளப்’ எனும் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தை அவரது நண்பரும் திரைப்பட இயக்குநரமான அபாஸ் ரஹ்மத் இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமர்சனத்திலும் வசூலிலும் சறுக்கியது. இதையடுத்து தான் அடுத்து தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், லோகேஷ் கனகராஜ்.

புதிய படத்தின் அறிவிப்பு..

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தான் அடுத்து தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த படத்திற்கு ‘பென்ஸ்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதையை லோகேஷ் எழுதியிருக்கிறார். 

ரெமோ படத்தை இயக்கி பிரபலமான பாக்கியராஜ் கண்ணன், பென்ஸ் படத்தை இயக்க இருக்கிறார். 

ஹீரோ யார் தெரியுமா? 

பென்ஸ், படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, இவர்கள் ஒன்றாக ஒரு திரைப்படத்தில் பணிபுரிய போகின்றனர் என்ற தகவல் வெளியாகிவிட்டது. இந்த படத்தில் நடிகை நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் இன்னும் இப்படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பது முடிவாகவில்லை. பென்ஸ் படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், தங்கள் டீம் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை கொடுத்த ராகவா லாரன்ஸிற்கு நன்றி என குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸிற்கு விசில் போட்ட நடிகர் விஜய்-வைரல் வீடியோ!

என்ன செய்து கொண்டிருக்கிறார் லோகி?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து இயக்கிய லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. சில தினங்களுக்கு முன்பு, நடிகர் ரஜினிகாந்த் தனது இரு கைகளிலும் கைகடிகார கைவிலங்கு அணிந்திருப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவுப்புகளே ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு ஹைப்பை அதிகப்படுத்தியிருக்க, அதை இன்னும் ஏற்றும் வகையில் “இதுவரை பார்க்காத ரஜினியை இந்த படத்தில் பார்ப்பீர்கள்” என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 

தலைவர் 171 படத்தின் கதையை எழுதுவதற்காக சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுத்திருக்கும் லோகி, தனது வேலையை முடிக்கும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. ‘வேட்டையன்’ படத்தின் பணிகள் முடிந்ததும், தலைவர் 171 படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகராக அவதாரம்…

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் வெளியான ‘இனிமேல்’ பாடல் மூலம நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த பாடலுக்கும் லோகிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

மேலும் படிக்க | விஜய் ஆண்டனி அரசியலுக்கு வருவாரா இல்லையா? அவரே கூறிய பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours