தமிழில் ஒளிபரப்பாகும் சன்னி லியோனின் ‛ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் நிகழ்ச்சியின் 15வது சீசன்

Estimated read time 1 min read

தமிழில் ஒளிபரப்பாகும் சன்னி லியோனின் ‛ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்’ நிகழ்ச்சியின் 15வது சீசன்

12 ஏப், 2024 – 10:57 IST

எழுத்தின் அளவு:


15th-season-of-Sunny-Leones-Tamil-show-Splitsvilla

‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்’ நிகழ்ச்சியின் 15வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே.

பாலிவுட்டில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் மிகவும் பிரபலமான, அதிக பார்வையாளார்களை கொண்ட நிகழ்ச்சி “ஸ்ப்ளிட்ஸ் வில்லா”. இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு எக்கச்சக்க இளசுகளின் ஆதரவு இருந்து வருகிறது. இளம் வயது ஆண், பெண்களை கவரும் வகையில் இந்த நிகழ்ச்சியின் கரு அமைந்திருப்பதால், இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதைவிடவும் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோனி தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர். சன்னிலியோனின் உடைக்காகவும் அவரின் அழகுக்காகவும், அவரை பார்ப்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை காண்பவர்கள் பலர்.

இந்த நிலையில், பிரபல டேட்டிங் நிகழ்ச்சியான ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் சமீபத்திய சீசனுக்கு தயாராகிவிட்டார் சன்னி லியோன். (Splitsvilla X5) ‘ஸ்ப்ளிட்ஸ் வில்லா’ நிகழ்ச்சியின் 15 வது சீஸனின் ‘எக்ஸ் ஸ்க்வீஸ் மீ ப்ளீஸ்’ என்ற அறிமுகப்பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனது புதிய இணை தொகுப்பாளர் நடிகர் தனுஜ் விர்வானியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார் சன்னி.

அல்தாப் ராஜா மற்றும் ஆகாசா சிங் பாடியுள்ள இந்தப் பாடல், ‘ஸ்பிளிட்ஸ்வில்லா’ சீசனில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை காண்போருக்கு புரிய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஸ்ப்ளிட்ஸ் வில்லா’ நிகழ்ச்சியின் 15 வது சீசன் மீதான எதிர்பார்ப்பை இந்த ஆன்தம் கிளறியுள்ளது என்றே கூறலாம். இந்த வீடியோ பாடலை தனது சமூகவலைத்தளம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சன்னி லியோன், இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், ‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்’ நிகழ்ச்சியின் 15வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே. MTV ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் இந்த சீசன் ஜியோ சினிமாவில் தமிழில் ஒளிபரப்படும்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours