சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்தி கீர்த்திக்கு வாய்ப்பு கொடுக்க அதைப் பார்த்து தனம் மனம் உடைந்து போன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது தனம் அப்செட்டாக வீட்டுக்கு வர பூஜையில் இருந்த ஜானகி அதைப் பார்த்து தனத்தை கூப்பிட அவள் கண்டுகொள்ளாமல் ரூமுக்கு வந்து விடுகிறாள். அதன் பிறகு ஜானகியும் மாயாவும் ரூமுக்கு சென்று பார்க்க அவள் பேட்மிட்டன் பொருட்களை தூக்கிப்போட்டு டென்ஷனாக இருக்கிறாள்.
கண்ணை காட்டும் மாயா
ஜானகி என்ன விஷயம் என்ன ஆச்சு என்று கேட்க மாயா காலேஜில் நடந்ததை சொல்லாத என்று கண்ணை காட்ட உடனே தனம் கார்த்திக் சார் எனக்கு பதிலா கீர்த்தி என்ற பொண்ணு சேர்த்துக்கிட்டாரு, எனக்கு கஷ்டமா போச்சு அதனால நான் இனி பேட்மிட்டன் விளையாட மாட்டேன் என்று சொல்கிறாள்.
இதைக் கேட்ட ஜானகி நீ ஏதோ ஒரு இடத்துல விட்டு இருக்கேன் அது என்னன்னு கண்டுபிடிச்சு விளையாடு. யாருக்காகவும் எதுக்காகவும் உன்னுடைய கனவு விட்டுக் கொடுக்கக் கூடாது என ஊக்கப்படுத்தி பேசுகிறாள். மறுபக்கம் லிங்கம் வீட்டில் ரகுராம் வீட்டில் பிரச்சனை நடக்கும்போது எல்லாம் அது சிவராமன் என்னை அடிக்கிறான்.
மேலும் படிக்க | முன்னாள் மனைவிக்காக பாடல் பாடிய தனுஷ்-வெட்கப்பட்ட ஐஸ்வர்யா! வைரல் வீடியோ..
அவன வச்சு அவங்க என்ன ரகுராம் அவமான படுற மாதிரி ஏதாவது ஒரு விஷயத்தை பண்ணனும் என்று பிளான் போடுகின்றனர். பிறகு சாரு ரகுராம் வீட்டிற்கு கிளம்பி வருகிறார். ஜானகி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க ரகுராம் நீ பாட்டு பாடி ரொம்ப நாள் ஆயிடுச்சு ஒரு பாட்டு பாடு என்று சொல்ல அவன் சாமி பாட்டு பாடுகிறாள்.
ரகுராம் வீட்டுக்கு வரும் ஊர்காரர்கள்
இந்த நேரத்தில் ஊர்காரர்கள் சிலர் ரகுராம் வீட்டுக்கு வந்து நம்ம ஊர் பையன் பக்கத்து ஊருக்கு போய் பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்து இருக்கான், அந்த ஊர் ஆளுங்க அவனைப் பிடிச்சு நம்ம ஊரு பஞ்சாயத்துல கொண்டுவந்து நிறுத்தி இருக்காங்க நீங்க தான் அதுக்கு ஒரு நல்ல தீர்ப்பு கொடுக்கணும் என்று கூப்பிடுகின்றனர்.
இந்த நேரத்தில் பார்வதி சிவராமன் நேத்து வெளியே போனாரு இன்னமும் வீட்டுக்கு வரல என்று சொல்கிறாள். அதெல்லாம் சீக்கிரம் வந்துருவான் என்று சொல்லி ரகுராம் பஞ்சாயத்திற்கு கிளம்பி செல்கிறார்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத் தவறாதீர்கள்.
மேலும் படிக்க | ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகை! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours