‘ஆடுகளம்”, ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2′,`கேம் ஓவர்’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. தற்போது பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வருகிறார். கடந்த மார்ச் 23-ம் தேதி தனது நீண்ட நாள் காதலனான பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். டாப்ஸியின் திருமணத்தில் இயக்குநர் அனுராக் காஷ்யப், கனிகா தில்லன் உட்பட நெருங்கிய பாலிவுட் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
திருமணம் குறித்து எந்த ஓர் அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்த டாப்ஸி தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த டாப்ஸி, “நான் என்னுடைய திருமணத்தை ரகசியமாக நடத்தத் திட்டமிடவில்லை. ஆனால் இந்த திருமணத்தைப் பொதுவெளியில் அறிவித்தால் பலவிதமான கருத்துகள் வரும்.
+ There are no comments
Add yours