Thalaivar 171 Update Actress Shobana To Be Paired Up With Rajinikanth For Lokesh Kanagaraj Movie

Estimated read time 1 min read

Thaliavar 171 Update : தமிழ் திரையுலகில், தற்போது டாப் இயக்குநர்களின் லிஸ்டில் இருப்பவர், லோகேஷ் கனகராஜ். இவர், தற்பாேது ரஜினியை வைத்து தான் இயக்கப்போகும் படத்தின் கதை எழுதும் பணியில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இதில் ரஜினிக்கு ஜோடியாகும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த நடிகை யார் தெரியுமா? 

தலைவர் 171:

லியோ படத்தை இயக்கி முடித்த கையாேடு, லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படம், தலைவர் 171. ரஜினிகாந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க, படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பு, அறிவு ஆகியோர் இப்படத்தின் ஸ்டண்ட் இயக்குநர்களாக உள்ளனர். தற்போது ‘வேட்டையன்’ படத்தில் பிசியாக இருக்கும் ரஜினிகாந்த், அடுத்து தலைவர் 171 படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருக்கும் என்றும், இதுவரை பார்த்திராத ஒரு ரஜினிகாந்தை பார்ப்பீர்கள் என்றும் லோகி தெரிவித்திருந்தனர். இதையடுத்து, ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. 

இவர்தான் ஜோடி!

தலைவர் 171 படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர் என்ற தகவல் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில், ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பது யார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை, ஷோபனாதான். 54 வயதாகும் மலையாள நடிகையான இவர், தமிழிலும் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இவர் நடிகை மட்டுமன்றி பரத நாட்டிய கலைஞரும் கூட. 

மேலும் படிக்க | ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Shobana

மீண்டும் இணைகின்றனர்..

நடிகை ஷாேபனா, ரஜினிக்கு ஜோடியாக மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் 1991ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் சுப்புலக்ஷமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்டிரி அப்போது பலருக்கு பிடித்திருந்தது. தற்போது கிட்டத்தட்ட 33 வருடங்கள் கழித்து இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 1999ஆம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ஒன்றாக நடித்திருந்த இவர்கள், 25 வருடங்கள் கழித்து இப்படத்தில் இணைந்தனர். இப்படி பழைய சினிமா ஜோடிகளை புதுமையான வகையில் திரையில் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 

படத்தின் டைட்டில் இதுவா? 

தலைவர் 171 படத்தின் டைட்டில் குறித்த சில தகவல்களும் முன்னதாக வெளியாகியிருந்தன. இப்படத்திற்கு ‘கழுகு’ என பெயரிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே “காக்க-கழுகு” சர்ச்சை விஜய்-ரஜினியை சுற்றி வட்டமடித்து கொண்டிருக்கின்றன. இதை வைத்து இருவரது ரசிகர்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதை டைட்டிலாக வைத்தால் அது இன்னும் பெரிய வில்லங்கமாக முடியும் என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று வேட்டையன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பினை லைகா நிறுவனம் வெளியிட்டது. படம், அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஜீன்ஸ் படத்தில் நடிக்க இருந்தது ‘இந்த’ முன்னணி ஹீரோதான்! அவர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours