“பல நண்பர்கள் எனக்கு நினைவூட்டினார்கள் ஜாக்கி, இது உங்களின் 70வது பிறந்தநாள் என்று. ஒவ்வொரு முறையும் இந்த நம்பரைக் கேட்கும்போது, என் இதயம் ஒரு நொடி நின்றுவிடும். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட பிறகு என் நினைவுக்கு வரும் இரண்டாவது விஷயம், என் பெரிய சகோதரர் சம்மோ ஹங் ஒருமுறை கூறியது: “வயது முதிர்வு என்பது ஓர் அதிர்ஷ்டகரமான விஷயம்’ என்பதுதான்.
சில நாள்களுக்கு முன்பு என்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்து பலரும் எனது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து வருவதைப் பார்த்தேன். யாரும் வருந்த வேண்டாம். வயதான கதாபாத்திரத்தில் நான் நடித்து வரும் புதிய படத்துக்கான தோற்றம்தான் அது.
+ There are no comments
Add yours