தமிழ் சின்னத்திரை உலகின் லேட்டஸ்ட் அப்டேட்கள் இதோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `தமிழும் சரஸ்வதியும்’. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தத் தொடர் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்திருக்கிறது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் இந்தத் தொடர் நிறைவடைய இருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/d2f41686-c514-4c5e-a00c-8d9782961fc3/MV5BYzQ1NDJmYjAtOGU4NS00YTM4LThiYzctMzgxNDRlZWJmOGQ3XkEyXkFqcGdeQXVyMTI2NDkwMDMy__V1_.jpg)
தொடரையும் அதில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களையும் மிஸ் செய்யப் போவதாக தமிழும் சரஸ்வதியும் தொடர் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கமென்ட் செய்து வருகின்றனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான `யாரடி நீ மோகினி’ தொடர் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் நக்ஷத்ரா. இவருக்கும் சீரியல் தயாரிப்பாளர் விஷ்வாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/f531df56-354e-4544-abfd-66a3f30158e5/Snapinsta_app_426374072_18212794534285290_4941276417538716920_n_1080.jpg)
நக்ஷத்ரா ஜீ தமிழில் `டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியில் அவருடைய நடனம் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `செவ்வந்தி’ தொடரில் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதன் மூலம் நக்ஷத்ராவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். கதை நாயகியாக மீண்டும் நக்ஷத்ரா சின்னத்திரையில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `கிழக்கு வாசல்’. இந்தத் தொடரில் கதாநாயகியாக நடிக்கும் ரேஷ்மா சில வாரங்களாக சீரியலில் வரவில்லை. ஆனால் அவர் அந்தத் தொடரிலிருந்தும் விலகவில்லை. தொடர் தற்போது வேறொரு டிராக்கில் சென்று கொண்டிருக்கிறது. கதை, கதாநாயகன் வெங்கட்டை சுற்றி நகர்ந்து கொண்டிருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/c1b09f5b-3dae-447a-a887-71f907e84a05/Vijay_TV_Serial_Kizhakku_Vasal.jpg)
தற்போது இந்தத் தொடரில் வெங்கட் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதன் மூலம் தொடர் சுவாரஸ்யமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேஷ்மாவும் விரைவிலேயே தொடரில் என்ட்ரியாவார்… அவர் சார்ந்து கதைக்களம் இனி நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை கதாபாத்திரத்தில் முதன்முதலாக வெங்கட் நடிக்கிறார்.
+ There are no comments
Add yours