மதுரை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செல்லூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இராம ஸ்ரீநிவாசன்

அப்போது பேசியவர், “10 ஆண்டுகள் நல்லாட்சி தந்த மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார் என கம்பீராமாக உள்ளோம். ஆனால், திமுக மற்றும் எடப்பாடி கம்பெனியில் யாருக்கு வாக்கு கேட்கிறார்கள், யார் பிரதமர் வேட்பாளர் என்பதே தெரியாமல் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மதுரையின் வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காவும் மதுரை தொகுதி மக்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். ஸ்ரீநிவாசன் மூலம் மத்திய அரசிடம் நேரடியாக நமது ஊரின் தேவைகளை கேட்டுப்பெறலாம். இப்போது இந்தியாவை ஆளும் கட்சியாகவும், தேர்தல் முடிந்து மீண்டும் ஆளப்போகின்ற கட்சியாகவும் இருக்கும் பாஜக வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

டிடிவி தினகரன்

ஓபிஎஸ் தைரியமாக ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார், அண்ணாமலை, தமிழிசை சௌந்தராஜன், எல்.முருகன், ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆனால் எடப்பாடியும், அவருடன் இருக்கும் மணிகளும் இந்த தேர்தலில் போட்டியிடாமல் யாரையோ பலிகடா ஆக்கி வருகின்றனர். எடப்பாடி அணி திமுகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார்கள். திமுகவிற்கு உதவி செய்யும் விதமாக ஸ்டாலினுடன் ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.

இராம ஸ்ரீநிவாசன்

கடந்த ஆட்சியில் 4 ஆண்டு செய்த ஊழலிலிருந்து தப்பிக்க திமுக-வுக்கு உதவி செய்து, திமுக ஆட்சியை பாதுகாக்க பாஜக-வுக்கு துரோகம், ஓபிஎஸ்-ஸுற்கு துரோகம், நமக்கு துரோகம் என துரோகத்தின் அடையாளமாக உள்ளார். இதனால் இந்த தேர்தலில் திக்குமுக்காடி வருகிறது. எடப்பாடி மக்களை ஏமாற்றி வருகிறார்.

திமுக ஆட்சியில் போதை மருந்து மூலை முடுக்கெல்லாம் கிடைப்பதை தடுக்க 2024-ல் நல்லாட்சி அமைந்திட தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இளைஞர்களும், முதியவர்களும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *