Loading

இதையடுத்து கடந்த பிப்ரவரியில் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிஷி மர்லினா வீட்டுக்கே சென்று நோட்டீஸ் வழங்கினர். அந்தநோட்டீஸில், “நீங்கள் குற்றம் சாட்டியபடி, பா.ஜ.கவால் பேரம் பேச அணுகப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களின் பெயர் பட்டியலை வெளியிடுங்கள்” எனக் கேட்டு அவகாசம் கொடுத்தது. அதற்கு பதிலடி கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் வலைதளத்தில், “ஆம் ஆத்மியின் எந்தெந்த எம்.எல்.ஏ-க்களை பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று பா.ஜ.கவின் அரசியல் எஜமானர்கள் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் என்னை விட நீங்கள் அதை நன்றாக அறிவீர்கள். உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே! டெல்லியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக எந்தெந்தக் கட்சிகளில் இருந்தெல்லாம் எந்தெந்த எம்.எல்.ஏ-க்கள் மூலமாக எந்தெந்த அரசுகள் கவிழ்க்கப்பட்டது என்பது பற்றியெல்லாம் உங்களுக்கு நன்றாகவே தெரியுமே! பிறகு எதற்காக இந்த நாடகம்?” என காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

அதைத் தொடர்ந்து பேசிய அதிஷி மர்லினா, “கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆம் ஆத்மி தலைவர்கள் விசாரணை ஆணையங்களின் சோதனைகள் மூலமாக அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். மதுபான கொள்கை ஊழல் என்ற பெயரில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடத்துகிறார்கள்; சிலருக்கு சம்மன் அனுப்புகிறார்கள், சிலரை கைதும் செய்கிறார்கள். இப்படி நூற்றுக்கணக்கான சோதனைகளை அமலாக்கத்துறை நடத்தியும், இதுவரை ஒரு ரூபாயைக்கூட கைப்பற்றவில்லை. நீதிமன்றம் சொல்லியும் இரண்டு ஆண்டுகளாக உருப்படியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வில்லை! விசாரணை ஆணையங்கள் மூலமாக, பா.ஜ.க எங்கள் கட்சியை முடக்க நினைக்கிறது. ஆனால் நாங்கள் இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்!” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *