இது தொடர்பாக, வழக்கறிஞரும், திமுக செய்தி தொடர்பாளருமான சரவணனிடம் பேசினோம், “பாபா ராம்தேவ் என்றால் யார் என்பதே யாருக்கும் தெரியாமல் தான் இருந்தது. ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பின் மூலமாக, அன்னா ஹசாரேவுடன் இணைந்து பாஜக-வுக்கு ஆதரவாக போராடிய போது தான் வெளியே தெரிந்தார். அஸ்ஸாமில் பாபா ராம்தேவுக்காக சூழலியல் சட்டங்களை மீறி பாஜக அரசு ஏக்கர் கணக்கில் நிலத்தை குத்தகைக்கு கொடுத்தது சர்ச்சையானது. அவரது ருச்சி சோயா என்ற நிறுவனத்தின் பங்குகள் 30 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரைக்கும் சென்றது.

சரவணன், திமுக செய்தித் தொடர்பாளர்

சரவணன், திமுக செய்தித் தொடர்பாளர்

பாஜக அரசு அளித்த சலுகைகளால் இந்தியாவின் 100 பணக்காரர்களில் ஒருவராக மாறினார். ‘கொரோனில்’ என்ற ஒரு மருந்தை, இது கொரோனாவை குணப்படுத்தும் என்றார். ஒன்றிய அரசு அதை கண்டு கொள்ளவே இல்லை. இதே போன்று பல தவறான விளம்பரங்களை கொடுத்துள்ள பதஞ்சலி நிறுவனம் கடந்த 10 வருடங்களில் தான் மிகப் பெரிய லாபத்தை ஈட்டி இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் பாஜக-வுக்கும் அவருக்குமான நெருக்கமே காரணம். உச்ச நீதிமன்றம் சரியான முறையில் தீர்ப்புகளை வழங்கி வருகிறது.  இதை பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு என பார்க்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்திடமிருந்து இந்த நியாயத்தை தான் எதிர்பார்க்கிறோம். பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்பது ஒன்றும் புதிதில்லையே” என்றார்.  

இது தொடர்பாக களத்தில் தேர்தல் பரப்புரையில் இருந்த பாஜக-வினரிடம் பேசும் போது, “பாபா ராம்தேவ் என்ற தனி நபருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சில கருத்துகளைக் கூரியுள்ளது. இதில் நாங்கள் கருத்து கூற எதுவுமில்லை. மேலும் மத்திய அரசு பாரபட்சமின்றி தன் கடமையை செய்து வருகிறது” என முடித்துக் கொண்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *