மேலும், ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கச் சர்க்கரை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. திடீர் சர்க்கரை அளவு குறைவதைத் தடுக்க மிட்டாய்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதியம் மற்றும் இரவு உணவிற்கு வீட்டில் சமைத்த உணவு வழங்கப்பட்டு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு அவசரநிலைக்கும் அவரது அறைக்கு அருகில் மருத்துவக் குழு தயார் நிலையில் இருக்கிறது எனச் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் அதிஷி மெர்லினா

அமைச்சர் அதிஷி மெர்லினா

அவர் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டபோது அவரது எடை 55 கிலோவாக இருந்ததாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த எடை தொடர்ந்து வருவதாகவும், அவரது ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி தன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடுமையான நீரிழிவு நோயாளி. உடல்நலக் குறைவு இருந்தபோதிலும், 24 மணி நேரமும் நாட்டுக்காக உழைத்து வந்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *