சென்னை: திருவண்ணாமலையில் ‘வாழும் கலை’ அமைப்பின் ஆசிரமம் வரும் வியாழக்கிழமை (நவ.23) முதல்முறையாக திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் அவ்வமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துகொள்கிறார் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வாழும் கலை அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலகெங்கிலும் 180 நாடுகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான சேவையுடன், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் ஆன்மிக தளத்தில் செயல்படுகிறது வாழும் கலை அமைப்பு. தமிழகத்தில் முதல் முறையாக திருவண்ணாமலையில் ஆன்மிக நல்வாழ்வை வளர்ப்பதற்கும், பழங்கால மரபுகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக வாழும் கலை ஆசிரமத்தை திறக்கப்படுவதை பெருமையுடன் அறிவிக்கிறது.