சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்களை, அத்துமீறி ஆலயத்துக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள மயிலாப்பூர் சரக காவல் அதிகாரியின் செயல் கண்டிக்கத்தக்கது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில தினங்களுக்கு முன்பு டாக்டர் தேவநாதன் யாதவ் அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை நள்ளிரவில் காவல்துறை அதிகாரிகள் துணைக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் நேற்று யாதவ மகாசபை சார்பில், மயிலை காபாலீஸ்வரரிடம் வேண்டுதல் மனு அளிப்பதாக அறிவித்து இருந்தனர். அதற்கு இந்து முன்னணி சார்பில் ஆதரவு தெரிவித்து இருந்தோம்.