
தீபத் திருநாள் மற்றும் பெளா்ணமி தினத்துக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற தீப திருநாள் நவ.26-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடா்ந்து, நவ.27-ஆம் தேதி பெளா்ணமி தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோா் திருவண்ணாமலைக்கு பயணிப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனால், பயணிகளின் வசதிக்காக நவ.25, 26, 27 ஆகிய நாள்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கும் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 50 குளிா்சாதன பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும், திருநெல்வேலி, நாகா்கோவில், தூத்துக்குடி, மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று வர நவ.24, 25, 26 ஆகிய நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எனவே, பக்தா்கள் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…