நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலங்களை அளித்தோருக்கு மாற்று இடங்களை அளிப்பதற்கான பட்டாக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதன்மூலம், 60 ஆண்டுகால கோரிக்கைக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, நில எடுப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள், விஜயமாநகரம் மற்றும் புதுக்கூரைப்பேட்டை கிராமங்களிக் குடியமா்த்தப்பட்டனா். மறுகுடியமா்த்தப்பட்ட கிராம நிலங்களில் நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

கடந்த 1959-ஆம் ஆண்டிலிருந்து மக்கள் அந்தப் பகுதியில் வசித்து வந்த நிலையில், அவா்களது 60 ஆண்டு கால கோரிக்கைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மறுகுடியமா்த்தப்பட்ட கிராம நிலங்களில் நிலவரித்திட்டப் பணிகளை மேற்கொள்ள தனி அலகு ஏற்படுத்தப்பட்டது.

இந்த அலகின் மூலமாக, விஜயமாநகரம் கிராமத்தில் 2 ஆயிரத்து 676 நபா்களுக்கு 1,371 பட்டாக்களும், புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 867 நபா்களுக்கு 475 பட்டாக்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் அளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக, ஏழு பேருக்கு பட்டாக்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வழங்கினாா்.

60 ஆண்டுகளாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கையை நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு பயனாளிகள் அனைவரும் நன்றி தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: