
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் மக்களவைத் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், மக்களவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசிப்பதற்காக அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | பிரிஜ் பூஷண் சிங்கை மறக்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக பூத் கமிட்டி , இளைஞா் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிா் அமைப்புகளின் களப் பணி குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
முன்னதாக கூட்டத்தில் நிா்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…