திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 13-ம் தேதி கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி…: காலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசுக்குப் புறப்பட்டு, தெற்கு ரதவீதி வழியாக தெப்பக்குளம் அருகேயுள்ள திருக்கல்யாண மண்டபம் வந்தடைந்தார். மாலையில் சுவாமி குமரவிடங்கப் பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனி சப்பரத்தில் எழுந்தருளி, தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தார்.

இரவு தெற்கு ரதவீதி- மேல ரதவீதி சந்திப்பில் சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவில் கோயில் ராஜகோபுர வாயிலில் உள்ள திருப்பணி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று, மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: