senthil085643

கோப்புப் படம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் தமிழ்நாடு அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதற்கிடையே, சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சகப் பகுதியில் அசெளகரியம், கை மற்றும் கால்கள் மரத்துப் போகு நிலை உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக கடந்த வாரம் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது மருத்துவக் காரணங்களுக்காக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையும் படிக்க | முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு: ஆளுநர் ஒப்புதல்

மேலும், செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனில் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் முழு மருத்துவ அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: