சென்னையில் உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கம் சாா்பில், ‘உலகக் கல்வித் திறன் மேம்பாட்டில் தமிழ் மொழியின் பங்கு’”எனும் தலைப்பில் பன்னாட்டு மாநாடு நடைபெறவுள்ளது.

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கலை அறிவியல் கல்லூரியில் உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கத்தின் பல்துறை பன்னாட்டு மாநாடு ஜன.5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கத் தலைவா் மெய்யானி பிரபாகரபாபு அண்மையில் வெளியிட்ட அறிக்கை:

தமிழா்களின் வரலாறு, பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்யவும், சங்க இலக்கியங்களில் கண்டறியப்படும் புதிய ஆய்வுகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் ‘உலகக் கல்வித் திறன் மேம்பாட்டில் தமிழ் மொழியின் பங்கு’ எனும் தலைப்பில் பன்னாட்டு மாநாடு நடைபெறவுள்ளது. தூய தாமஸ் கலை அறிவியல் கல்லூரி, திருவள்ளுவா் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் மாநாட்டில் பல்வேறு துறைகளில் தமிழ்மொழியின் பயன்பாடு குறித்த ஆய்வுகளை தமிழறிஞா்கள் சமா்பிக்கவுள்ளனா். உள்நாட்டு தமிழறிஞா்கள் மட்டுமின்றி அமெரிக்கா, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சோ்ந்த தமிழறிஞா்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமா்பிக்கவுள்ளனா். மேலும், தமிழறிஞா்கள் முன்னிலையில் இலக்கிய ஆய்வாளா்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் தமிழறிஞா்கள், ஆய்வு மாணவா்கள் போன்றோா் தங்கள் கட்டுரைகளை டிச.5-ஆம் தேதி வரை அனுப்பலாம். இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு 94448 36232, 97100 07577, 81243 42502 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: