தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவருகிறது. இதில், 4.5 சதவிகித கொழுப்புச்சத்துடன் லிட்டர் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை, மக்கள் பெரிதும் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

அதாவது, சென்னையில் விற்பனையாகும் மொத்த பால் பாக்கெட்டுகளில் பச்சை நிற பால் பாக்கெட் மட்டும் 40 சதவிகிதம். இப்படியிருக்க, பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நவம்பர் 25-ம் தேதியுடன் நிறுத்துவதாகவும், அதற்கு பதில் அதே விலையில் 3.5 கொழுப்புச்சத்துடைய டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகள் விற்பனையாகும் எனவும், அரசு முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு, எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.