
கோப்புப்படம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருச்செந்தூரில் 33 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சியானது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிக்கு நகருகிறது.
இக்காற்று சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும். குறிப்பாக தூத்துக்குடி திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதையும் படிக்க: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி நீர் திறப்பு: மின் உற்பத்தி தொடக்கம்
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதில், சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை தூத்துக்குடியில் 8.3 மி.மீ., குலசேகரப்பட்டணம் 15மி.மீ., சாத்தான்குளம் 20.8 மி.மீ., திருச்செந்தூர், காயல்பட்டிணம் 33 மி.மீ., என மழை பதிவாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…