புதுக்கோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் உலக்குடியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(40). இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டத்தைச் சேர்ந்த ஏம்பல் கிராமத்தில் உள்ள ஒரு டீ கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். நவ.14-ம் தேதி ஏம்பல் கடை அருகே தலையில் பலத்த காயங்களுடன் ராமச்சந்திரன் சடலமாக கிடந்தார்.இந்நிலையில் தனது கணவர் சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ராமச்சந்திரனின் மனைவி ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து ஏம்பல் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் டீ கடையில் பணிபுரிந்த சக தொழிலாளர்களான நாரணமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்(33), மணமேல்குடி நரியனேந்தலைச் சேர்ந்த ரங்கய்யா(24) ஆகியோர் ராமச்சந்திரனை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சுப்பிரமணியன், ரங்கையா ஆகியோர் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: