சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நேற்று இரவு ராமேஸ்வரம் வந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தனியார் விடுதியில் தங்கியிருந்த நிதி அமைச்சரை பாம்பன் ராயப்பன் தலைமையிலான நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் சந்தித்து, தங்கள் பிரச்னைகளை தெரிவித்தனர்.
கடந்த 15-ஆம் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் கைது செயப்பட்டுள்ள 22 நாட்டுப்படகு மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் வைத்தனர்.

அதேபோல் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் சேசுராஜா, சகாயம் உள்ளிட்டோர் அமைச்சரை சந்தித்து ‘இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், 135 படகுகளை மீட்டுத்தர வேண்டும்’ என்று கைகூப்பி கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க இந்திய வெளியுறவுத் துறை மூலம் இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடமும் பேசி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதனை அடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் நல்லிணக்க அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் படகுகளுடன் இன்று விடுவிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளதாக நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதனிடையே, இன்று காலை அதிகாலையில் இராமநாத சுவாமி கோயிலுக்கு சென்று வழிபடார் நிர்மலா சீதாராமன்.

ஒரே இரவில் பேசி இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க முயற்சி எடுத்ததற்காக நன்றி தெரிவிக்க வந்த மீனவ பெண்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “வெற்று வார்த்தைகளால் உங்களை கவரும் தமிழக அரசியலை நம்பாதீர்கள்.” என்றார்.
22 மீனவர்களை விடுவித்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.