லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா இணைந்து நடித்த லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் விஜய்யின் பிளாஷ் பேக்கைச் சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
லியோ படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில், நடிகர் மன்சூர் அலிகான், ‘நடிகை த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் போய்விட்டது, ரேப் சீன்களெல்லாம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை’ என்று பேசியிருந்தார். இதனைக் கண்டித்து த்ரிஷா தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்து பெரும் பேசுபொருளாகியிருந்தது. மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சைக் கண்டித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சின்மயி, குஷ்பூ உள்ளிட்ட பல திரைபிரலங்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மன்சூர் அலிகான் இதற்கு விளக்கமளித்துள்ளார். பத்திரிகையாளர்களுக்கு அவர் அனுப்பிய குறுஞ்செய்தி கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.
Disheartened and enraged to hear the misogynistic comments made by Mr.Mansoor Ali Khan, given that we all worked in the same team. Respect for women, fellow artists and professionals should be a non-negotiable in any industry and I absolutely condemn this behaviour. https://t.co/PBlMzsoDZ3
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 18, 2023
அதில், “‘அய்யா’ பெரியோர்களே. திடிர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க.
பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா. திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் MLA. M.P. மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN ணுன்னு சொன்னேன்.

இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும் 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு… பொழப்ப பாருங்கப்பா….நன்றி!” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours