நிமிஷா சஜயன் அழகாக இல்லையா? – கார்த்திக் சுப்பராஜ் பதிலடி
19 நவ, 2023 – 11:59 IST
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு மீடியாக்களை சந்தித்தபோது, நிமிஷா சஜயன் அழகாக இல்லை என்றாலும் நன்றாக நடித்துள்ளார். அவரை எந்த அடிப்படையில் இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்தீர்கள் என்று நிருபர் ஒருவர் கார்த்திக் சூப்பராஜிடம் கேள்வி கேட்டார்.
அதற்கு அவர், நிமிஷா சஜயன் அழகாக இல்லை என்று எப்படி சொல்லலாம். எதை வைத்து அவர் அழகாக இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். அழகு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வைத்திருப்பது போல் தெரிகிறது. என்னை பொருத்தவரை அவர் திறமையான அழகான நடிகை என்று ஒரு பதில் கொடுத்தார் கார்த்திக் சுப்புராஜ்.
+ There are no comments
Add yours