பிக் பாஸ் சீசன் 7, 47 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு மத்தியில் குழுவாகப் பிரிந்து விளையாடுவது அதிகரித்து வருகிறது.

மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ, நிக்சன் ஆகியோரை Bully Gang என்று சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம், ஐஷூ பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறினார். இது நல்ல முடிவு என்றும், இதற்கு மக்கள் ஆதரவும் தெரிவித்தும் வந்தனர். போட்டியில் இருக்கும் போது டான்ஸ் மற்றும் டாஸ்க்குகளில் சரியாக இருந்தாலும், சில சச்சரவுகளும் இவர் மீது எழுந்தது.

ஐஷு

பிக் பாஸிலிருந்து வெளியான ஒரே வாரத்தில், ஐஷு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார். இது பிக் பாஸ் ரசிகர்கள் வட்டாரத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது தன்னுடைய நடத்தைக்காக மன்னிப்புக்கூறி பதிவிட்டிருக்குறார். அதில்,

“இந்நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பிற்காக நிறைய பெண்கள் காத்திருக்கும் நிலையில், நான் எனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனது குடும்பத்திற்கும் அவமரியாதையை ஏற்படுத்திவிட்டேன். யுகேந்திரன் சார், அர்ச்சனா, விசு அம்மா, ப்ரதீப், மற்றும் மணி அண்ணா என்று பலர் என்னை சரியாக வழி நடத்திய போதும் நான் அதைக் கேட்கவில்லை. அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கோபம், காதல், பொறாமை, நட்பு ,ஆகியவை என் கண்ணை மறைத்து விட்டது.

பூர்ணிமா – மாயா

நான் முதல் முறையாக ஒரு பெரிய மேடையை சந்தித்தது இதுவே முதல்முறை. அதை எவ்வாறு கையாளுவது என்று எனக்குத் தெரியவில்லை. எனது குடும்பத்தை இந்த விஷயத்தில் சம்பந்தப்படுத்த வேண்டாம். இவை அனைத்திற்கும் நான் மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நிகழ்ச்சியில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். ப்ரதீப்பிற்கு எதிராக நான் ரெட்கார்ட் தூக்கியதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நான் உங்களுடைய நோக்கத்தை புரிந்திருந்தால், உங்களுக்கு துரோகம் செய்திருக்கமாட்டேன்.

மேலும், நிக்சனின் ரசிகர்களிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அங்கு நான் செய்த எந்த ஒரு விஷயத்தையும் நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. 21 வயதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் நான் விளையாடிவிட்டேன். இதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எனது குடும்பத்தின் மீது கருணை காட்டுமாறும், இதில் அவர்களை ஈடுபடுத்தி பேச வேண்டாம் என்றும் நான் உங்களிடன் கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் நான் எப்படி இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதை கற்றுக்கொள்கிறோம். மேலும், எவ்வாறு இருக்கக்கூடாது என்பதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்,” என்று பதிவிட்டிருந்தார்.

ஐஷூ தனது தவறை உணர்ந்ததற்காக பலர் பாராட்டி வருகின்றனர். மாயாவின் கூட்டணிக்கும் இதர போட்டியாளர்களுக்கும் என்னவெல்லாம் நடக்கவிருக்கிறது என்று பரபரப்புடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஐஷூ வின் இந்த பதிவு குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: